Saturday, August 23, 2014

சென்னையின் மூத்த தொழில் குறித்து ஒரு பார்வை





















இன்று தொழிற்பேட்டைகள் செறிந்து தொழிற்துறையில் அசுரவளர்ச்சி பெற்றிருக்கும் சென்னையின் மூத்த தொழிலாக இருந்தது மீன்பிடி தொழில்தான். அந்த பாரம்பரியத் தொழிலை இன்றளவும் நம்பி பிழைக்கும் ஏராளமான மீனவ மக்கள் உள்ளனர்.

16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தற்போதைய மெரீனாவிலிருந்து பெசன்ட் நகர் வரை குறுகியிருந்த மீனவ கிராமங்கள் தான் இன்று, தமிழகத்தின் தலைநகராய் விஸ்வரூபமெடுத்திருக்கும் சென்னையின் தொடக்கப்புள்ளி. பின்னர், சிந்தாதிரிபேட்டை, ராயபுரம், புரசைவாக்கம், மயிலாப்பூர் என்று சென்னையின் பரப்பளவு விரிந்தது.

மதராஸ் என அழைக்கப்பட்ட காலம் முதலே இங்கு கடற்கரை பகுதிகளில் வசித்து வருவதால், மண்ணின் மைந்தர்கள் என அழைக்கப்பட வேண்டியவர்கள், மீனவர்களே.

சென்னை தன் 375ம் ஆண்டு பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாடி வரும் வேளையில் சென்னை தினம் குறித்த கேள்வியை இந்த மக்களிடம் முன்வைத்தோம். இன்றைய சென்னையில் அயோத்திகுப்பம், நடுக்குப்பம், நொச்சி, ஓடைமாநகர், கொட்டிவாக்கம், காசிமேடு, ராயபுரம், தாழங்குப்பம்,எண்ணூர்குப்பம் என, 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர்.

நகர வளர்ச்சி மற்றும் அழகுபடுத்துதல் என்ற பேரில் இந்த சமூகத்தின் ஒரு பகுதியினர் நகரப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதாக சாடுகின்றனர் சென்னையின் வரலாறு தெரிந்தவர்கள்.

சென்னையின் மிகமுக்கிய அடையாளமான தங்களை அந்நியப்படுத்த முடியாது என்கிறார்கள் மீனவ மக்கள். வேகமாக வளர்ந்து வரும் சென்னையின் வேகத்துக்கு தங்களையும் ஒன்றிணைத்து கொள்வதே தங்களின் பலம் என்கிறார் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர் மூர்த்தி.

375 ஆண்டு வரலாற்றைக் கொண்டிருக்கும் சென்னை. பலதரப்பட்ட சமூக கலாசார மாற்றங்களை காலப்போக்கில் அரவணைத்துக் கொண்டாலும். இன்றும் கடற்கரைப் பகுதிகளில் மாறாத உற்சாகத்துடன் மீனவர்கள் தங்கள் பணிக்கு சென்று வருவதை காணலாம்.
PuthiyaThalaimurai TVஆகஸ்ட் 22, 2014, 

1 comment:

  1. i was little shocked to know the OLDEST PROFFESSION OF CHENNAI...
    GENERALLY PEOPLE REFER PROSTITTUTION AS THE OLDEST PROFFESSION....

    ReplyDelete