மாட்டு வண்டியில் உற்சவர்: ஹிண்டு சாரியட் என்று ஆங்கிலத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் உள்ள வாகனம், அநேகமாகக்
கோயில் உற்சவ மூர்த்திகளின் ஊர்வல . மாக இருக்க வேண்டும்.
ஒரு வருஷம் கழித்து நம் சொந்த ஊருக்குத் திரும்பினாலே, அந்தப் பகுதியின் அடையாளச் சின்னமாக இருந்த மரமோ, கட்டிடமோ, சாலையின் ஒரு பகுதியோ காணாமல் போய், வெறிச்சென்று இருக்கும். வழி தெரியாமல் முழிப்போம்.
தப்பித்த பழம் பெருமை: தற்போது ராஜாஜி ஹால் என்றழைக்கப்படும் இந்த அரங்கம் 1800களில் கட்டப்பட்டது. பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான விருந்து அரங்காக (Banqueting Hall) இது இருந்திருக்கிறது. தற்போது பல்நோக்கு மருத்துவமனை (புது சட்டப்பேரவை) அமைந்திருக்கும் புதிய வளாகம் கட்டப்பட்டபோது, இந்தக் கட்டிடம் இடிக்கப்படாமல் தப்பித்துவிட்டது.
ஆனால், இன்றைக்குப் பெருநகராக மாறிவிட்ட சென்னை போன்ற ஊரில் கால் பதிக்கும்போது, இப்படி ஆச்சரியம் ஏற்படுத்தும் தருணங் களை நிச்சயம் எண்ண முடியாது.
அன்றைய ஆட்டோ!: ஜட்கா என்று அழைக்கப்பட்ட இந்தக் குதிரை வண்டி, இன்றைய ஆட்டோக்களைப் போல அந்தக் காலச் சென்னையில் போக்குவரத்துக்குப் பயன்பட்ட வாகனம். கறுப்பு வெள்ளைப் படத்தில் வண்ணம் சேர்க்கப்பட்ட படம் இது.
சென்னை இப்படியெல்லாம் இருந்திருக்குமா என்று யோசிக்க வைக்கும் வகையில் பல கறுப்பு வெள்ளை படங்கள் வந்துவிட்டன. ஆனால், சென்னையைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியரும் அஞ்சல்தலை சேகரிப்பாளருமான த. முருகவேளிடம் இருக்கும் படங்கள், நமது ஆச்சரியத்தை மேலும் அதிகரிக்கின்றன.
குளத்தைக் காணோம்!: தற்போது பல்நோக்கு மருத்துவமனை வளாகமாகிவிட்ட, முந்தைய ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் காவல்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் இது. படத்தில் உள்ள குளம் இருந்த பகுதியில்தான், தற்போதைய எம்.எல்.ஏ. ஹாஸ்டல் அமைந்திருக்கிறது.
காட்டுயிர், இயற்கை சார்ந்த அஞ்சல் தலைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கைக் கொண்ட இவர், அதற்காகத் தென்னிந்திய அளவில் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இங்கே இடம்பெற்றுள்ள படங்களை அஞ்சல் தலை சேகரிக்கும்போது, சேர்த்துச் சேகரித்திருக்கிறார்.
"நாம் வாழும் ஊரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால்தான் பிக்சர் போஸ்ட்கார்டுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் ஒரு ஊருக்குச் சுற்றுலா செல்லும்போது, அந்த ஊரின் முக்கியப் பகுதிகள், காட்சிகள், பழக்கவழக்கங்களைச் சொல்லும் கவர்ச்சிகரமான வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்புவது வழக்கம்.
வண்ண அச்சிடும் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில், கறுப்பு வெள்ளைப் படத்தின் மேலேயே வண்ணம் சேர்க்கப்பட்டதும் உண்டு. இந்தப் பிக்சர் போஸ்ட்கார்டுகளில், அஞ்சல் செய்யப்பட்டவை மிகவும் அரிது. இந்த இரண்டு வகைகளும் என்னிடம் இருக்கின்றன" என்கிறார் முருகவேள்இந்து:சனி, ஆகஸ்ட் 23, 2014
No comments:
Post a Comment