Showing posts with label கல்லூரி.. Show all posts
Showing posts with label கல்லூரி.. Show all posts

Monday, July 14, 2014

ராணிமேரி கல்லூரியின் 100–வது ஆண்டு விழா: தபால் தலை வெளியிடப்பட்டது


சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ளது ராணிமேரி கல்லூரி. தமிழ்நாட்டின் முதல் பெண்கள் கல்லூரியான இந்த கல்லூரி 1914–ம் ஆண்டு ஜூலை 14–ந்தேதி தொடங்கப்பட்டது.

இந்த கல்லூரியின் முதல் முதல்வராக இங்கிலாந்தை சேர்ந்த டிலாஹே இருந்தார். இந்த கல்லூரியின் 50–வது ஆண்டு பொன்விழாவுக்கு அப்போது பிரமதராக இருந்த இந்திரா காந்தி வந்து இருந்தார்.

இப்படி பெயரும், புகழும் மற்றும் பசுமை வாய்ந்த ராணிமேரி கல்லூரியின் 100–வது ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது.

நூற்றாண்டு விழாவையொட்டி தபால் தலை இன்று வெளியிடப்பட்டது. உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தலைமை தாங்கி தபால் தலையை வெளியிட்டார். 90 வயதான முன்னாள் முதல்வர் செல்வி ஜெகதலம்மாள் இதை பெற்றுக்கொண்டார்.
100 மரக்கன்றுகளும் நடப்பட்டது. 100 பலூன்கள் பறக்க விடப்பட்டன. இதே போல நூற்றாண்டு விழா கேக்கும் வெட்டப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

முன்னாள் மாணவிகயும், பாடகிகளுமான வாணி ஜெயராம், அனுதாரா ஸ்ரீராம், உமா ரமணன் ஆகியோரும் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

ராணிமேரி கல்லூரியும், முன்னாள் மாணவிகளும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நூற்றாண்டு விழா ஒரு வருடம் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

திங்கள், ஜூலை 14, 2014