Showing posts with label மெட்ரோ ரயில். Show all posts
Showing posts with label மெட்ரோ ரயில். Show all posts

Thursday, October 16, 2014

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 10 கி.மீ. நீள மெட்ரோ ரயில் தடம் தயார்:




கோயம்பேடு – ஆலந்தூர் இடையே முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், தமிழக அரசியல் மாற்றங்களால் திட்டமிட்டபடி தைப் பொங்கல் நாளில் போக்குவரத்தை தொடங்க முடியுமா என்று அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக ரூ.14,600 கோடியில் மெட்ரோ ரயில்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இரு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதை மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 

முதல்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கி.மீ. நீள பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தைப் பொங்கல் நாளில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய நடந்து முடிந்துவிட்டன.

அதிநவீன சிக்னல்

மெட்ரோ ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிக்னல் செயல்பாடு குறித்து ‘சீமென்ஸ்’ நிறுவனம் ஆய்வுசெய்து, ‘இண்டிபென்டன்ட் சேப்டி அசெஸர்’ சான்று அளிக்க வேண்டும்.

 அதைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர், மெட்ரோ ரயிலை வேகமாக இயக்கி இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டு அனுமதிச் சான்று அளிப்பார். இந்த 2 பணிகளும் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும்.
ஆனால், தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் திட்டமிட்டபடி தைப் பொங்கல் நாளில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க முடியுமா என்று அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே உலகத் தரத்தில் ரயில் தண்டவாளம், 7 ரயில் நிலையங்கள், 10 மெட்ரோ ரயில்கள், கோயம்பேட்டில் பணிமனை மற்றும் கட்டுப்பாட்டு அறை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. சோதனை ஓட்டமும் நடந்து கொண்டிருக்கிறது.

7 ரயில் நிலையங்கள்

கோயம்பேடு, சென்னை புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி.)., அரும்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய 7 ரயில் நிலையங்களில் 98 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிக்கட்ட ஆய்வு முடிந்ததும் பறக்கும் ரயில் நிலையங்களில் வர்ணம் தீட்டும் பணி ஒரு வாரத்தில் முடிக்கப்படும்.
மனிதத் தவறை துல்லியமாகக் கண்டறிய ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காபி ஷாப், ஏடிஎம், புக் ஸ்டால் போன்றவற்றை அவுட்சோர்ஸிங் முறையில் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடக்கின்றன.

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண விவரம் குறித்து,மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதை தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ஆகவும் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ரூ.5 வீதம் கூடுதலாக கட்டணம்வசூலிக்கப்படும். இக்கட்டணத்தை தமிழக அரசு அப்படியே அறிவிக்கலாம் அல்லது குறைக்கலாம்.

மெட்ரோ ரயில் நிலையம் ஒவ்வொன்றும் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. 2 அடுக்குகொண்ட ஆலந்தூர் ரயில் நிலையம் மட்டும் ரூ.200 கோடி செலவில் அமைந்துள்ளது. கோயம்பேடு – ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் பணிகளுக்கு மட்டும் ரூ.4 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது.

கட்டமைப்புகள் வீணாகும்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படுமோ என்று கவலையாக உள்ளது. குறித்த காலத்தில்போக்குவரத்தை தொடங்காவிட்டால், ரூ.4 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் கட்டமைப்புகள் பொலிவிழந்துவீணாகும். அதைத் தடுக்க வேண்டுமானால் குறிப்பிட்ட காலத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

தி இந்து:வியாழன், அக்டோபர் 16, 2014

Monday, September 22, 2014

அடுத்த ஆண்டு இறுதியில் கோயம்பேடு ஷெனாய் நகர் இடையே சுரங்கப் பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து


அடுத்த ஆண்டு இறுதியில் கோயம்பேடு ஷெனாய் நகர் இடையே 5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14,600 கோடி செலவில் 45 கி.மீ. தூரத்துக்கு இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், 24 கி.மீ. சுரங்கப் பாதை, 21 கி.மீ. பறக்கும் பாதை. மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில், 19 சுரங்கப்பாதை ரயில் நிலையங் கள், 13 பறக்கும்பாதை ரயில் நிலையங்கள் ஆகும்.

சென்னையில் முதல்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் கோயம்பேடு ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதை யில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
இப்பாதையில் ரயில்வே பாது காப்பு ஆணையர் நவம்பர் மாதம் இறுதிக்கட்ட ஆய்வை முடித்து அறிக்கை அளிப்பார் என்றும், டிசம்பர் மாதம் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரங்கள், தரையில் இருந்து 45 அடி ஆழத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 36,308 மீட்டர் நீள சுரங்கப் பாதையில், இதுவரை 29,912 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப் பாதை அமைக் கப்பட்டுவிட்டது. நேற்றுடன் 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

ஒரு சுரங்கப்பாதை ரயில் நிலை யத்துக்கும் மற்றொரு சுரங்கப் பாதை ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள பகுதி “ஒரு டனல் செக்சன்” என்று அழைக்கப்படு கிறது. அவ்வாறு அமைக்க வேண் டிய 40 டனல் செக்சனில், இது வரை 23 டனல் செக்சனில் சுரங்கப் பாதை (மெட்ரோ ரயில் போக்கு வரத்துக்கான தனித்தனி குகை) அமைக்கப்பட்டுவிட்டது.

வண்ணாரப்பேட்டை மண் ணடி, மண்ணடி உயர் நீதிமன்றம், மே தினப் பூங்கா அரசினர் தோட்டம், அரசினர் தோட்டம் எ ல்.ஐ.சி., சைதாப்பேட்டை சாய்தள பகுதியிலிருந்து சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை நந்தனம், நேரு பூங்கா எழும்பூர், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர் அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் கிழக்கு அண்ணா நகர் டவர், அண்ணாநகர் டவர் திருமங்கலம் ஆகிய சுரங்கப்பாதை ரயில் நிலையங்களுக்கு இடையே 2 சுரங்கப்பாதைகளும் முழுவதுமாக அமைக்கப்பட்டுவிட்டன.

உயர் நீதிமன்றம், கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, அண்ணா நகர் டவர், திருமங்கலம் ஆகிய 5 சுரங்கப் பாதை ரயில் நிலையங் களில் கட்டுமானப் பணி முடிந்து விட்டது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “சுரங்கப் பாதையில் முதல்கட்டமாக கோயம் பேடு ஷெனாய் நகர் இடையே 5 கி.மீ. தூரத்துக்கு முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து அடுத்த ஆண்டு டிசம்பரில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பாதையில் கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங் கள் உள்ளன. 2016-ம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் பாதை, சுரங்கப் பாதை (45 கி.மீ.) அமைக் கப்பட்டுவிடும்” என்றார்.

தி இந்து:    திங்கள், செப்டம்பர் 22, 2014