பட்டாசு பாதுகாப்பு!
தீபாவளி என்றாலே, குழந்தைகளுக்கு குஷி தான். பட்டாசு, மத்தாப்பு, சரவெடி என்று வான வேடிக்கைகளின் உற்சாகக் கொண்டாட்டத்துக்கு குறைவே இருக்காது. தீபாவளி அன்று மகிழ்ச்சி நீடித்து இருக்க, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கான முன்னெச்சரிக்கை விஷயங்களை விளக்குகிறார் கே.எம்.சி மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், துறை தலைவருமான ஜெகன் மோஹன்.
பட்டாசுகளை வெடிக்கும் முன்பு கவனம்!
* ஊதுபத்தி பற்ற வைக்க விளக்குக்கு பதில் மெழுகுவத்தி பயன்படுத்தலாம். இதன் மூலம் பெரிய தீவிபத்தை ஏற்படாமல் தடுக்க முடியும்.
* ராக்கெட் வெடிக்க விரும்பினால் திறந்த வெளியில் சென்று வெடிக்க வேண்டும். * வாளியில் நீரை நிரப்பி எப்போதும் வைத்திருக்கவேண்டும். * குடிசைகளில் வசிப்போர் அவரது கூரைகளை தீபாவளி வரும் வாரம் முழுவதும் தண்ணீரை ஊற்றி ஈரமாக வைத்திருக்கலாம். இதனால் ராக்கெட் விழுந்தாலும் எளிதில் தீ பற்றாது. * ஆடையின் பாக்கெட்டுக்குள் பட்டாசை வைத்துக் கொண்டு வெடிக்க கூடாது. கைகளில் வைத்தும் வெடிக்க கூடாது. பெரியவர் துணையுடன் வெடிக்கலாம். பட்டாசு நேராக முகத்தை வைத்திருக்க கூடாது. தீடிரென்று வெடித்தால் முகத்தில் தான் காயங்கள் ஏற்படும். கண்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம். * பட்டாசு வெடிக்காமல் புகை மட்டும் வந்துக் கொண்டிருந்தால் அவற்றின் மேல் தண்ணீரை ஊற்றிவிட வேண்டும். * எரிந்து விட்ட மத்தாப்புகள், தீக்குச்சிகளை நீர் நிறைந்த பக்கெட்டில் போட்டுவிடுங்கள். கீழே எரிவதால் எவரேனும் மிதித்து விட வாய்ப்புள்ளது. தீக்காயம் பட்டால் செய்யவேண்டியது: * உடலில் எங்கேனும் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் உடனடியாக தண்ணீரை ஊற்றிவிட வேண்டும். அதன் பிறகு சுத்தமான வெள்ளை பருத்தி துணியில் தீ பட்ட இடத்தை, போர்த்திக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். * தீக்காயம் பட்ட இடத்தில் இங்க் தடவுவது, சாக்கு போட்டு தீயை அணைப்பது, வாழை சாறு தடவுவது, ஐஸ் வைப்பது, ஆயின்ட்மெண்ட் பூசூவது, மஞ்சள் தேய்ப்பது போன்றவற்றை செய்யகூடாது. இதனால், காயம்தான் இன்னும் ஆழமாகும். காயத்தின் நிலையை கண்டறிய மருத்துவர்கள் சிரமப்படுவர். சிகிச்சைக்கு பிறகு காயம் குணமாவதற்கு நீண்ட நாட்களாகும். * தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீர் தான் முதல் மருந்து. நீர் ஊற்றினால், கொப்பளம் வருவதில்லை. அப்படியே கொப்பளம் ஏற்பட்டாலும், தீக்காயம் ஆழமாக போகவில்லை என்று மகிழ்ச்சி அடையுங்கள். கொப்பளம் ஏற்படவில்லை என்றால் அந்த காயம் சருமத்தின் உள்வரை சென்றிருக்கிறது என்று அர்த்தம். * முடிந்தவரை வெடி சத்தம் குறைந்த பட்டாசுகளை வெடிப்போம். சுற்றுசூழலையும் அதை சார்ந்த மற்ற உயிரினங்களையும் பாதுகாப்போம். பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவோம். ஆடைகளில் கவனம் * உடை மெல்லியதாக இருக்க வேண்டாம். பருத்தியால் ஆன உடை, ஜீன்ஸ் அணிவது நல்லது. எளிதில் தீ பற்றாது. * உடைகளை, தழைய தழைய அணியக் கூடாது. நீண்ட ஸ்கர்ட், லூஸ் பைஜமா, நைலான், சின்தடிக், வேஷ்டி போன்ற ஆடைகளை அணியக் கூடாது. * பட்டாசு வெடிக்கும் போது கட்டாயமாக காலணிகளை அணிய வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளை தவிர்க்கவும். ஒடி வரும் போது கீழே தடுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை கண்காணித்தபடியே இருக்கவேண்டும். தீ சுடும் என்பது தெரியாமல், எடுக்க போகலாம். அனைவரின் இல்லத்திலும் ஆனந்தம் பெருக தீபாவளி வாழ்த்துக்கள்!
|
No comments:
Post a Comment