Saturday, October 25, 2014

நவ.1-ம் தேதி சனிக்கிழமை சிறப்பு பாஸ்போர்ட் மேளா

கோப்புப் படம்

விரைவாக பாஸ்போர்ட் வழங்கு வதற்கு வசதியாக வரும் நவ.1-ம் தேதி, சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, சென்னையில் சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாள் ஒன்றுக்கு 1,850 பேர் நேர்காணல் செய்யப்பட்டு வந்தனர். இது வரும் 30-ம் தேதி முதல் 2,080 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இதன்படி, சாலிகிராமத்தில் நாள் ஒன்றுக்கு 1,300-ம், அமைந்த கரையில் 400-ம், தாம்பரத்தில் 380 நேர்காணல்களும் மேற்கொள் ளப்படும். மேலும், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் தேவை அதிகரித்து வருவதை ஒட்டி, அதை சமாளிக்க வரும் நவ.1-ம் தேதி சனிக்கிழமை சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளது.

அன்றைய தினம் சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை யில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படும். இதன் மூலம் 1,700 விண்ணப்பதாரர்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

எனவே, விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பப் பதிவு எண்ணை பெற வேண்டும். 

மேளாவுக்கு வரும்போது இந்த பதிவு எண்ணை பதிவிறக்கம் செய்து கொண்டு வர வேண்டும். 

சாதாரண முறையில் விண்ணப்பிப் பவர்கள் மட்டுமே இந்த மேளா வில் பங்கேற்க முடியும். தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர் களுக்கு மேளாவில் பங்கேற்க அனுமதி இல்லை.

மேலும், அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் தலைமை அலுவலகத்தில் உட்புற பரிசீலனை நாளாக அனுசரிக்கப்பட உள்ளதால், அன்றைய தினம் பாஸ்போர்ட் தொடர்பான எவ்வித விசாரணைப் பணிகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது.

 இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்து:சனி, அக்டோபர் 25, 2014

Lecture :Symbol and Metaphor: The South Indian Temple by Champaka Lakshmi at The Leela Galleria, The Leela Palace, MRC Nagar, on October 31 at 6 pm.

CHENNAI : Temple is not just a religious monument, it is an institution with multiple roles, according to Champaka Lakshmi, former professor at JNU, who has specialised in religion, ideology, state and society. Giving us an outline of her upcoming talk at Leela Galleria, she says, “Temples are not just what people understand it to be — places of worship. Architecture and iconography of a temple represent various ways of symbolising political power, societal organisation and religious interaction.”
The lecture is an attempt to situate art and architecture in their social context through an integrated approach, using all the related sources, the monuments, their iconography, the temple inscriptions and  literature, mainly the bhakti and hagiographical, the Agamic canonical texts and the vastu shastras.
In her 45-minute talk, she will elaborate on how temples have evolved in a series of processes — historical, political and economics.
 “These reforms happen in different forms everywhere, however, I chose South India, because it presents one of the excellent examples of the evolution of temples and iconography,” she says.
 “If you look at the narrative sculptures in Mamallapuram during the Pallava period, they are metaphors for royal power and warrior ability,” she adds. 

Thrivikrama panel in Mamallapuram and Tripurantaka in Tanjore are other examples. She adds that the forms seen on temples are dependent on the king who developed it. According to Champaka Lakshmi, monuments in pre-colonial South India were only temples. “Secular monuments were just not there till the Vijayanagara period.
 There might have been monuments made of bricks and perishable material, but excavations haven’t brought them out,” she says. 
Attend the talk Symbol and Metaphor: The South Indian Temple by Champaka Lakshmi at The Leela Galleria, The Leela Palace, MRC Nagar, on October 31 at 6 pm.
For details, call, 9941012385

Express: 25th October 2014 06:04 AM

சென்னை மனிதரான சுந்தர் பிச்சையிடம் கூகுள் நிறுவனத்தின் முக்கியமான பொறுப்புகள்

கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைப்பு!
சான்பிரான்ஸ்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த முக்கியமான பொறுப்புகள் பலவும் ஆண்ட்ராய்ட் பிரிவை நிர்வகிக்கும் சுந்தர் பிச்சையிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த பொறுப்பு அதிகரிப்பு என்பது, சென்னை மனிதரான சுந்தர் பிச்சையின் கேரியரில் முக்கியமான ஏற்றமாக பார்க்கப்படுகிறது.
சென்னையை சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (42), சுந்தர் பிச்சை என்ற பெயரால் புகழடைந்தவர். ஐஐடி காரக்பூரில் பேச்சிலர் இன் டெக்னாலஜி படிப்பை முடித்த பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏவும் படித்தவர். முன்னணி நிறுவனமான கூகுளில் இவர் 2004ம் ஆண்டுதான் பணிக்கு சேர்ந்த போதிலும், திறமை காரணமாக வெகு விரைவில் உயர் பதவிகளுக்கு வந்தார்.


கூகுளின் முக்கியமான தயாரிப்பான ஆண்ட்ராய்டு பிரிவை நிர்வகிக்கும் பொறுப்பு பிச்சையிடம் அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி குரோம், கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றையும் பிச்சைதான் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் முக்கிய முடிவு ஒன்றை கூகுள் சி.இ.ஓ லார்ரி பேஜ் எடுத்துள்ளார். அதன்படி, கூகுளின் மேப்ஸ், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளையும் பிச்சையின் பொறுப்பிலேயே கொடுத்துள்ளார் லார்ரி பேஜ்.
சுந்தர் பிச்சையின் பதவியில் எந்த மாற்றமும் அளிக்கப்படவில்லை என்ற போதிலும், கூடுதலான பொறுப்புகள், பிச்சையின் முக்கியத்துவத்தை கூகுள் உணர்ந்துள்ளதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. புதிதாக தரப்பட்டுள்ள பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், இனிமேல் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் வருகிறார்கள்.
இப்பொறுப்புகளில் இருந்து விடுபட்டுள்ள லார்ரி பேஜ், கூகுளின் வர்த்தகம், செயல்பாடு, கூகுள் எக்ஸ், நிர்வாக மேம்பாடு, சட்டம், நிதி மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார். கூகுளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல லார்ரி பேஜ் முழு நேரத்தையும் செலவிட இந்த மாற்றங்கள் உதவும் என்கிறது கூகுள் தரப்பு.
சுந்தர் பிச்சை, 2012ல் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்கும், 2013ல் ஆண்ட்ராய்டு பிரிவுக்கும் பொறுப்பாளராக பதவி உயர்வுகளை பெற்றார் என்பது நினைவிருக்கலாம். கூகுளில் இணையும் முன்பாக, அப்ளைய்ட் மெட்டீரியல்ஸ் மற்றும் மெக்கின்சே அன்ட் கோ ஆகிய நிறுவனங்களில் சுந்தர் பிச்சை பணியாற்றியுள்ளார்.
சென்னை மனிதரின் பெயர் இப்போது உலகின் ஜாம்பவான் நிறுவனங்களான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் முக்கிய பதவிகளுக்கான தேடுதல் பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெருமையே.
சனி, அக்டோபர் 25, 2014

Chennai in Lonely Planet 2015 list of top 10 cities to visit



MELBOURNE: Chennai has been named among the top 10 cities to visit this year by a leading global travel guide with the list being topped by US' capital Washington.

Lonely Planet's Best in Travel 2015 has come out with a list of top 10 destinations in different categories such as best countries to visit, best regions to visit, best cities to visit and many more such guiding lists for travel.
In the category of top 10 cities, Chennai has been ranked ninth, ahead of Canada's Toronto. Washington has been named as the best city to visit this year, followed by Argentinian city of El Chalten, Italy's Milan and Switzerland's Zermatt.
Also, Valletta in Malta, Plovdiv in Bulgaria, Salisbury in UK and Vienna in Austria have been ranked ahead of Chennai and Toronto.
"Chennai has long been seen as a stepping-stone to other parts of India. But with the opening of the Chennai Metro Rail, the capital of Tamil Nadu plans to raise its profile. If nothing else, fast and frequent air-conditioned trains will transform the experience of exploring this humid metropolis," the guide says in its brief profile of the city.
"And there's plenty to see: statue-covered Dravidian temples, fascinating museums, British-era fortifications and churches, a 3km-long beach, and India's second-largest movie industry, 'Kollywood'," it states.
Lonely Planet's list of top 10 countries to visit is topped by Singapore with Namibia and Lithuania occupying the second and the third spot respectively.
Nicaragua, Ireland, Republic of Congo, Serbia, the Philippines, St Lucia and Morocco complete the list of top 10 countries.
In the category of worlds top regions which was topped by Sikkim last year, Turkey's Gallipoli region has emerged as the best destination followed by US' Rocky Mountain National Park and Belize's Toledo region.
To compile the annual top 10 list, Lonely Planet asked its worldwide staff, contributors and authors for their well-known and lesser-known recommendations, and spots that have something special to offer in 2015.
"I'm excited by this year's list of cities. There's a good mix of obvious places to visit and less-obvious ones," said Tom Hall, Lonely Planet's digital editorial director.
PTI Oct 22, 2014, 01.44PM IST

Thursday, October 23, 2014

ரயில் பயணம்கள்: எண்139





ரயிலில் பயணம் செய்யும்போது போய் சேரும் இடம் வருவதற்கு சற்று முன்பாகவே உங்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த ரயில் விசாரணை முறை (139) 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எண்ணில் தொடர்புகொண்டு ரயிலில் காலியாக உள்ள இடம், முன்பதிவு டிக்கெட்டின் நிலை ஆகியவற்றை பயணிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், ரயில் வந்து கொண்டிருக்கும் இடத்தை துல்லியமாகத் தெரிவிக்கும் வசதி, பயணிகள் போய்ச்சேரும் இடம் வருவதற்கு சற்று முன்னதாகவே செல்போன் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி, செல்போன் மூலம் எச்சரிக்கை மணி அடிப்பது போன்ற வசதிகள் மேற்கண்ட எண்ணில் (139) சேர்க்கப்பட்டுள்ளன.

 பயணிகள் இந்த கூடுதல் தகவல் மற்றும் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடடா ...மழைடா ....அட.மழைடா... :சென்னை ஐஐடியில் : இரவில் பாரம்பரிய சங்கீத கனமழை


இரவின் கவின்மிகு இருட்டும், நெஞ்சைத் தொட்டு வருடும் இரவின் குளுமையும் கொண்ட அந்த இரவு வாரக் கடைசி நாள் என்று குதூகலமாக வரவேற்க்கப்படும் வெள்ளியன்று பல்வேறு இசையுடன் தொடங்கியபோது முதிர் மாலை ஏழு மணி.

 சென்னை ஐஐடி வளாகத்தில் `ஸ்பிக் மெகே` தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த இரவு பாரம்பரிய சங்கீத கனமழை பொழிந்தது.

விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பண்டிட் பத்மஸ்ரீ பிர்ஜு மஹாராஜ் வழங்கிய கதக் நடன நிகழ்ச்சி, சிவகுமார் ஷர்மாவின் சந்தூர் இசை, எல்.சுப்ரமணியம் மற்றும் அம்பி சுப்ரமணியம் வழங்கிய வயலின் இசை, எஃப். வாசிஃபுதின்
தாகரின் த்ருபத் இசை, பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் கர்நாடக இசை ஆகியவை இடம் பெற்று சங்கீத வெள்ளத்தை ஏற்படுத்தியது. 

ரசிகர்களாக அரங்கத்தில் எங்கு நோக்கினும் இளைஞர்கள், இளைஞர்கள் மேலும் இளைஞர்கள்.

இளைஞர்கள் இடத்திற்கு இசையையும் பாரம்பரிய கலைகளையும் கொண்டு சென்றால் அவர்கள் காட்டும் ஆர்வம் அளப்பறியது என்பதை நிரூபித்தது இந்த இரவு நிகழ்ச்சி.

 இதனை ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் சிறப்புற நிகழ்ந்தேற வைத்தது `ஸ்பிக் மெகே` என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
இந்நிறுவனத்தை 37 ஆண்டுகளுக்கு முன்னர் முனைவர் கிரண் சேத் என்ற முன்னாள் ஐஐடி மாணவரைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இவர் அறுபதுகளில் ஐஐடி கரக்பூரில் படித்து விட்டு, மேற்படிப்புக்காக அமெரிக்க நகரான கொலம்பியா சென்றுவிட்டார். 

அங்கு அவருக்குத் த்ருபத் இசையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்நாளில் அவருக்கு த்ருபத் இசை என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்ததாம்.

ஆனாலும் அந்நிகழ்ச்சிக்குச் சென்றார். அந்த அனுபவத்தை ”இந்நிகழ்ச்சிக்குச் செல்லும்போது தரையில் கால் பதித்து நடந்தேன். இசையைக் கேட்டுவிட்டு திரும்பும்போது, தரைக்கு ஒரு அடி மேலே மிதப்பது போல இருந்தது“ என்று கூறியிருக்கிறார்.

 இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே ஒரு மைல் தூரத்திற்கும் குறைவான இடைவெளியில் வெவ்வேறு பாரம்பரியத்தை கலை, உணவு, கலாசாரம் என காட்டி நிற்கிறது இந்தியா.
இந்தியாவின் மிகப் பெரிய சொத்தே இந்த பாரம்பரியக் கலைகள்தான் என்பதைப் புரிந்து கொண்ட அவர், உன்னதமான இக்கலைகள் முறையான பயிற்சி பெற்றவர்கள் மூலம் மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்டார். 

அதன் விளைவுதான் `ஸ்பிக் மாகெ‘ என்ற ( SPIC MACAY - Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth ) தன்னார்வத் தொண்டு நிறுவனம் தோன்றக் காரணமானது. இத்தகைய மிகச் சிறந்த கலைப் பாரம்பரியத்தைத் தோற்றுவித்து வளர்த்த முன்னோர்களுக்கு வந்தனம் தெரிவிக்கும் வண்ணம் இசை, நாட்டியம் ஆகிய விழா நிகழ்ச்சிகள் இந்நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 7000 நிகழ்ச்சிகளில் ஆயிரம் நிகழ்ச்சிகள் அரசு பள்ளிகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் கிரண் சேத், இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் ராஜீவ் காந்தி தேசிய சத்பாவனா விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

இந்த இரவு இசை நிகழ்ச்சியில் கண்டதும், கேட்டதும்:

கதக்: பண்டிட் பத்மஸ்ரீ பிர்ஜு மஹாராஜ்

கதக் என்றால் நடனத்தின் மூலம் கதை சொல்வது. பிரபலமான புராண, இதிகாச கதைகளை கை அசைவுகள் கண் அசைவுகள் மூலம் ரசிகர்களுக்கு புரிய வைப்பது இக்கலையின் முக்கிய அம்சம். 

இது வட இந்தியாவில் உருவான எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் முக்கியமானதாகும். நாடோடிப் பாணர்களுடன் தொடர்பு கொண்டிருந்த இக்கலை கிராம மையப்பகுதிகள் மற்றும் கோவில் முற்றங்களில் பாணர்களால் நடத்தப்பட்டது. 

கதைகளை புரிய வைப்பதற்காக, இசைக் கருவியொலி, வாய்ப்பாட்டு, கால் சதங்கை ஒலி ஆகியவற்றுடன் புது நடையிலான கை அசைவுகளைப் பாவனையாகப் பயன்படுத்துவார்கள்.

அரங்கம் முழுவதும் சுற்றிச் சுழன்று ஆடி, தாள கதியுடன் ஒன்றி ஆடுவார்கள். தபலாவின் தாளம் `சாம்` என்று நிறுத்தப்படும் கணமும், நாட்டிய மணியின் நடன நிறுத்தக் கணமும் ஒரே நேரத்தில் நிகழ்வது ரசிகர்களை பரவசமூட்டும்.

இக்கதக் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் இரவு ஏழு மணிக்குத் பிர்ஜு மஹராஜ் (விஸ்வரூபம் படத்தில் கமலஹாசனுக்கு கதக் நாட்டிய வடிவமைப்பைச் செய்தவர்) தலைமையில், கதக் குழுவினருடன் தொடங்கியது. 

தாளக் கட்டும், நடனமும் இணையும் முறையை, தபலா இசையுடன் நிகழ்த்திக் காட்டினார் பிர்ஜு மகராஜ். இதில் இந்தியில் பதினைந்து வரை எண்ணிக் காட்டி அதனை தாளக் கட்டுடன் இணையாக ஆடிக் காட்டியபடியே ஒரே நேரத்தில் சட்டென்று நிறுத்திக் காட்டினர் குழுவினர்

 அனைவரும். கைத்தட்டல் விண்ணை முட்டியது. 

இளைஞர் கூட்டமல்லவா கைத்தட்டலில் பலம் அதிகமாக இருந்தது. கதக் மூலம் வாலிபால் மற்றும் ஹாக்கி ஆடினார்கள்.

 உலக நிகழ்வுகள் அனைத்தையுமே நடனத்துள் அடக்கிவிடலாம் என்று நிகழ்த்திக் காட்டினார்கள். அகல்யை சாப விமோசனம் தத்ரூபமாக இருந்தது.

 இப்புராணக் கதையை புரிந்து கொண்டதை அறிவுறுத்தும் வகையில் இளைஞர்கள் கரகோஷம் பல நிமிடங்களுக்கு இடைவிடாமல் ஒலித்து காதைப் பிளந்தது. 

அடுத்து வந்தது ஜுகல் பந்தி இதில் பிர்ஜுவும் அவரது மாணவி சாஸ்வதி சென்னும் இணைந்து ஆடினார்கள். ஆடவரான பிர்ஜுவின் நடனத்தில் நளினம் மீதூறியது போற்றத்தக்கதாக இருந்தது.

சந்தூர்: சிவகுமார் ஷர்மா

சந்தூர் இசைக் கருவி வீணை இசைக் கருவி குடும்பத்தைச் சேர்ந்தது. நூறு தந்திகளைக் கொண்ட இக்கருவி சத தந்தி வீணை என்றும் அழைக்கப்படுகிறது. தபலாவுடன் தனி இசை கச்சேரி வழங்கினார் பண்டிட் சிவகுமார் சர்மா. முதலில் வந்தது பாகேஸ்வரி ராக ஆலாபனை. அவர் வாசிக்க வாசிக்க சின்ன சின்ன கிரிஸ்டல் கல்கண்டுகளை மழையாக மனதுள் பொழிந்தது போல் இருந்தது. 

இதமாக நெஞ்சை வருடும் தபலா அமெரிக்கை. நடுநிசியில் வந்த இந்த நல்ல இசையை ரசிகர்கள் கிறங்கிப் போய் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நடு நிசியானதால் பூ மலரும் ஓசை கூடக் கேட்டு விடுமோ என்று பூ மரமும் அதன் மொட்டுக்களும் அசையாமல் இருந்தது.

 இளைஞர்கள் கூட்டமல்லவா? 

ஒரு இருமல், கணைப்புக் கூட இல்லை. ஐநூறு பேர் சுற்றி அமர்ந்து தேவ லோக அமைதி காத்து, இந்த இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு இசையின்பால் மேலும் கிளர்ச்சியைத் தூண்டியது.

 எழுதா ஓவியம் போல் அசையாமல், மகுடி கேட்ட நாகம் போல் அமர்ந்திருந்த ரசிகர்களின் சபை நாகரிகம் அற்புதம்.

வயலின்: எல்.சுப்ரமணியம்

ஐரோப்பியர்களால் பதினாறாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வயலின், எட்டயபுர சம்ஸ்தான வித்வானான பாலசுவாமி தீட்சதர் என்பவரால் கர்நாடக இசை உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டதாம்.

 கர்நாடக வாய்பாட்டு இசைக்கு தவிர்க்க முடியாத பக்கவாத்தியமாக இன்றும் வயலின் கொண்டாடப்படுகிறது என்பதுதான் உண்மை.

 வயலின் வித்வான் எல்.சுப்ரமணியம், மோகன ராகத்தை எடுத்துக் கொண்டார். விறுவிறுப்பும் வேகமுமாக வில் பேசியது. 

எல்.சுப்ரமணியமும், அம்பி சுப்ரமணியமும் மாற்றி மாற்றி வேகம் கூட்டி வாசித்தது புதுமையான உணர்வை தந்தது. 

இதில் அம்பியின் இளமை வேகம், அவரது தந்தையின் அனுபவத்திற்கு சவால்விட்டது. 

நடுநிசி தாண்டி கருக் `கும்` இரவில், தனி ஆவர்த்தனம் கேட்டது, மொறு மொறு சிப்ஸ் சாப்பிட்டது போல்
`ஃப்ரஷ்ஷாக` இருந்தது.

 கச்சேரியில் அருகில் அமர்த்திக் கொண்டு இசையைக் குழைத்து குழைத்து அம்பிக்கு ஊட்டினார் தந்தை சுப்ரமணியம்.

 அப்போது இரவு இரண்டு மணி தூங்கி விடாமல், விழிப்பாய் பிடித்துக் கொண்டார் அம்பி வில்லில்.

த்ருபத்: எஃப். வாசிஃபுதின் தாகர்

கர்நாடக சங்கீதத்தில் இருந்து கிளைத்ததுதான் ஹிந்துஸ்தானி த்ருபத். ஹிந்துஸ்தானி வாய்பாட்டாக த்ருபத் இசையை இன்னும் விடியாத காலையில் மூன்று மணிக்கு தர்பார் ராகத்தில் தொடங்கினார் எஃப். வாசிஃபுதின் தாகர்.

 இந்த நேரத்திலும் குரல் கரகரக்காமல் வளமாய் இருந்தது இனிமையைக் கூட்டியது. ராக ஆலாபனை கூட ரிதத்திற்கு கட்டுப்பட்டதுதான் என்ற ஒரு புதுமைச் செய்தியைக் கூறிய அவர், ரசிகர்களை ரிதமாக கைத்தட்டச் சொன்னார். 

அந்த ரிதத்திற்கு ஆலாப்ஸ் பாடி அழகாய் நிறுத்தினார். இந்தக் கச்சேரியில் ரசிகர்களும் இணைந்து விட்டதால் ராகம் தர்பார், அரசவை தர்பாராக மிளிர்ந்தது.

 ஆலாப்ஸ்க்கு நடுவில் இருக்கும் அமைதியும் இசையே என்ற அவர், விஷ்ணு முராரி திருபுவன என்று பாடி முடித்தபோது காலை ஐந்து மணி.

கர்நாடக வாய்பாட்டு: டி.எம்.கிருஷ்ணா

மும்மூர்த்திகளின் கிருதிகளை பெருமளவு கொண்ட கர்நாடக இசை அனாதியானது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

 இதனை டி.எம். கிருஷ்ணா குரலில் பாடக் கேட்டது அலாதியானது. 

ராகமாலிகை கிருதிக்கு, ஸ்ரீராகம் உட்பட நான்கு ராகத்திற்கும் சின்னச் சின்னதாக ஆலாபனை செய்தபோது, விடிந்தும் விடியாத காலை 5.30 மணி. 

இந்த இரவெல்லாம் இசை வெள்ளத்தில் தோய்ந்திருந்த காதுகள், மேலும் இசையை விழுங்க விடைத்து நிமிர்ந்தன. 

ராகங்களுடன் தொந்த யுத்தம் செய்யாமல் பணிந்து கொஞ்சுகிறார் கிருஷ்ணா.

 அரங்கம் முழுவதும் அவர் அனுப்பிய ராக தேவதைகள் உலா
வந்தபோது, காலை ரம்மியமாக விடிந்தது.

 டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசையின் விடிவெள்ளி.

ஒரு யுகம் முழுவதும் இசைபட வாழ்ந்தாற்போல் இருந்தது.

 இனி இப்படியொரு வாய்ப்பு எப்போது கிடைக்கப் போகிறது? ஹூம்…


விக்னேஷ் ஜி ஐயர் –  தி இந்துவியாழன், அக்டோபர் 23, 2014

Tuesday, October 21, 2014

சென்னை செல்லங்கள் : சுப்பிரமணியன் சந்திரசேகர் ( 1910 - 1995)



நட்சத்திரங்களை எடை போட்டவர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் ( 1910 - 1995) (அக்டோபர் 19,1910 - ஆகஸ்ட் 21, 1995ஒரு வானியல்-இயற்பியல் விஞ்ஞானி. ஆங்கியேர் கால இந்தியாவில், இன்றைய பாகிஸ்தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன்- சீதாலட்சுமி தம்பதிக்குப் பிறந்த தமிழர்.

அவர் லாகூரிலும், பிறகு லக்னோவிலும் வாழ்ந்தபின், சென்னை வந்தடைந்தார். 11 வயதில் அவர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

 மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தார். அப்போதுதான் அவரது சித்தப்பா சர். சி. வி. ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. சந்திரசேகரின் அம்மா உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழாக்கியவர்.அவரின் அறிவார்ந்த ஆற்றலும் இளம் சந்திரசேகருக்கு மாபெரும் தூண்டுதலாக இருந்தது.

சந்திரசேகர் 19 வயது மாணவராக இருக்கும்போதே ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1930-ம் ஆண்டு, இந்திய அரசின் பண உதவி பெற்று, மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குப் போனார்.

அவர் தனது 19 –வது வயதில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன்படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார்.
மனைவி லலிதாவுடன் நோபல் விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் (கோப்புப் படம்).

  • மனைவி லலிதாவுடன் நோபல் விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் (கோப்புப் படம்).

விண்வெளியில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் இறுதிக் காலம் அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பொறுத்ததாக அமைகிறது. 

அதிகமான பொருள்நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ அல்லது கருந்துளைகளாகவோ மாறுகின்றன.

பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத் திரங்கள்- உதாரணமாக - நமது சூரியனைவிட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள்நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள்- வெள்ளைக் குள்ளன் எனும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.

இந்த நிகழ்ச்சிப்போக்கை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையை கணித அவதானிப்புகள் மூலம் அவர் அறிவித்தார். அவரது இந்த வரையறைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டுகிறது.

இந்த ஆய்வுக்காக இவருக்கு, 1983- ல் இயற்பியலுக் கான நோபல் பரிசு வில்லியம் பவுலர் என்பவரோடு இணைத்து வழங்கப்பட்டது.

1937 - ல் சந்திரசேகர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார்.

 1995 -ல் 84 வயதில் இறக்கும்வரை அதே பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார்.

 இவர் 1953 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்தார். அமெரிக்காவில் 50 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கினார். 

 "சந்திரசேகர் லிமிட்' என்றழைக்கப்படும் விண்மீன்களின் தோற்றம், அமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது
. அவரது நெருங்கிய உறவினர் சர்.சி.வி.ராமனுக்கு 1928-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 
அவரைப் பின்பற்றி சந்திரசேகரும் இயற்பியல் துறையில் கால்பதித்து, நோபல் பரிசு (1983), கோப்லி விருது (1984), அறிவியலுக்கான தேசிய விருது (1967), பத்ம விபூஷண் (1968) உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார்.
 1995 ஆகஸ்ட் 21-ம் தேதி தன்னுடைய 84-வது வயதில் அவர் காலமானார்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினைவாகப் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளன. 

கடவுள் நம்பிக்கை இல்லாதவராக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நீடித்தார்.

தி இந்து, அக்டோபர் 20, 2014

தீபாவளி போனஸாக கார், வீடு, நகை ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்தார் சூரத் வைர வியாபாரி



குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

சூரத் நகரத்தில் வசிப்பவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 70களில் வேலைதேடி சூரத்துக்கு வந்தார். அங்கு தன் உறவினர் ஒருவரிடம் சென்று வியா பாரம் தொடங்குவதற்குக் கடன் பெற்றார். அதை வைத்துக்கொண்டு அவர் சிறிய அளவில் வைர வியாபாரத்தைத் தொடங்கினார். 1992ம் ஆண்டு ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் எனும் வைர வியாபார நிறுவனத்தைத் தொடங் கினார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஓராண்டுக்கு ரூ.6,000 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக அதை மேம்படுத்தினார். தற்போது சூரத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் 9,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருப்பதால், தன்னிடம் பணியாற்றும் சுமார் 1,200 பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

ஊழியர்கள் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். சுமார் 500 ஊழியர் களுக்கு புதிய பியட் புன்டோ ரக கார்களையும், 207 பேருக்கு புதிய வீடுகளையும் மற்றும் 570 பேருக்கு நகைகளையும் சவ்ஜி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் சவ்ஜி தோலாக்கியா கூறும்போது, "என்னுடைய கனவுகள் எல்லாம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களால்தான் நிறைவேறியுள்ளன. இங்கு பணியாற்றும் நகைக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை அவர்கள் அடைந்து விட்டார்கள்.

இது ஹரிகிருஷ்ணா நிறுவனத் துக்கு மிகச் சிறப்பான நாள். அதனால் அனைவருக்கும் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட் டுள்ளன" என்றார்.

இந்த தீபாவளி பரிசுகளுக்காக ஓர் ஊழியருக்கு ரூ.3.60 லட்சம் செலவாகியிருப்பதாகவும், உலகிலேயே ஊழியர்களின் பணித் திறனைப் பாராட்டி இவ்வளவு பரிசுகள் வழங்கியிருக்கும் முதல் நிறுவனம் என்ற பெயரையும் தன்னுடைய நிறுவனம் பெற்றிருப் பதாக அவர் கூறினார்.
இங்கு பணியாற்றும் ஒரு நகைக் கலைஞரின் சராசரி மாதச் சம்பளம் ரூ. 1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

தி இந்து: 21 அக்டோபர் 2014

தீபாவளி வாழ்த்துக்கள்!



அல்லவை தேய 
அறம் பெருகும் நல்லவை 
நாடி இனிய  சொலின் 

அனைவரின் இல்லத்திலும்

ஆனந்தம் பெருக 

தீபாவளி வாழ்த்துக்கள்!

பாரிமுனை, ராயபுரம், புரசையில் களை கட்டிய தீபாவளி விற்பனை- கொட்டும் மழையிலும் அலை மோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி புரசைவாக்கம் பகுதியில் பொருட்கள், துணிமணிகள் வாங்க பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடிபட்டுள்ளனர்.
படம்: ம.பிரபு

தீபாவளி பண்டிகையையொட்டி புரசைவாக்கம் பகுதியில் பொருட்கள், துணிமணிகள் வாங்க பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடிபட்டுள்ளனர். படம்: ம.பிரபு
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் பண்டிகைக் கால விற்பனை சூடுபிடித்துள்ளது. அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி யுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண் டாடப்படுகிறது. இதையொட்டி பண்டிகைக் கால முன் தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
சென்னையில் தி.நகர் மட்டுமின்றி மற்ற மார்க்கெட் பகுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த 3 தினங்களாக இடைவிடாமல் மழை கொட்டும் நிலையிலும், தீபாவளி விற்பனை நேற்று சூடுபிடித்தது. காலையில் மந்தமாக இருந்த விற்பனை நண்பகல் முதல் களை கட்டியது.

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, ஈவ்னிங் பஜார் சாலை, பிளாஸ்டிக் பொருட்களுக்கான நாராயண முதலி தெரு, சேலைகளின் மொத்த மார்க்கெட்டான குடோன் தெரு, தங்க நகைக் கடைகள் மற்றும் அனைத்து வித பொருட்களும் கிடைக்கும் காசி செட்டித்தெரு உள்ளிட்டவற்றில் கூட்டம் அலை மோதுகிறது.

பூக்கடை போலீஸார் ஆங்காங்கே சாலையோரங்களில் தடுப்புக் கம்பிகள் வைத்து, கூடுதல் போலீஸார் மூலம் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். என்.எஸ்.சி.போஸ் சாலை, பிராட்வே பேருந்து நிலைய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் உயர் கோபுரம் அமைத்து கண்காணிக்கின்றனர்.

வடசென்னை மக்களுக்கு ஜவுளித் துணிகளுக்கு முக்கிய சந்தையாக விளங்கும் ராயபுரம் சுழல் மெத்தைப் பகுதி, எம்.சி.சாலை பகுதிகளில் ரெடிமேட் ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல் புதிய வண்ணாரப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை சாலைகளிலும் தீபாவளிப் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

மத்திய சென்னை மக்களின் முக்கிய வணிகப் பகுதியான புரசைவாக்கத்திலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. புரசைவாக்கம் தாணா தெரு, புரசை நெடுஞ்சாலை, வாட்டர் டேங்க் பகுதியில் ஜவுளி விற்பனை களை கட்டியுள்ளது. நெரிசலான பகுதிகளில் வாகனங்கள் ஒரு வழிப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.

பாரிமுனையில் மட்டும் பட்டாசு விற்பனைக்கு தடை

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பட்டாசு விற்பனைக்கு பாரிமுனையில் தடை விதிக்கப்பட்டு, சென்னை தீவுத்திடல் மைதானத்தில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. இதற்காக தமிழக சுற்றுலாத் துறை சார்பில், பட்டாசு விற்பனைக் கடைகள் தனியார் மூலம் அமைக்கப்பட்டு, பட்டாசு விற்பனை நடக்கிறது. 

வழக்கமாக பாரிமுனை மலையப் பெருமாள் கோயில் தெரு, பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு ஆகிய தெருக்களில் பட்டாசு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்தப் பகுதி ஏற்கெனவே நெரிசல் மிக்கது என்பதால், அங்கு பட்டாசுக் கடை அமைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தி இந்து: 21 அக்டோபர் 2014

அனைவரின் இல்லத்திலும் ஆனந்தம் பெருக தீபாவளி வாழ்த்துக்கள்!

பட்டாசு பாதுகாப்பு!
தீபாவளி என்றாலே, குழந்தைகளுக்கு குஷி தான். பட்டாசு, மத்தாப்பு, சரவெடி என்று வான வேடிக்கைகளின் உற்சாகக் கொண்டாட்டத்துக்கு குறைவே இருக்காது. தீபாவளி அன்று மகிழ்ச்சி நீடித்து இருக்க, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கான முன்னெச்சரிக்கை விஷயங்களை விளக்குகிறார் கே.எம்.சி மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், துறை தலைவருமான ஜெகன் மோஹன்.

பட்டாசுகளை வெடிக்கும் முன்பு கவனம்!











*  ஊதுபத்தி பற்ற வைக்க விளக்குக்கு பதில் மெழுகுவத்தி பயன்படுத்தலாம். இதன் மூலம் பெரிய தீவிபத்தை ஏற்படாமல் தடுக்க முடியும். 

*  ராக்கெட் வெடிக்க விரும்பினால் திறந்த வெளியில் சென்று வெடிக்க வேண்டும். 
*  வாளியில் நீரை நிரப்பி எப்போதும் வைத்திருக்கவேண்டும்.
*  குடிசைகளில் வசிப்போர் அவரது கூரைகளை தீபாவளி வரும் வாரம் முழுவதும் தண்ணீரை ஊற்றி ஈரமாக வைத்திருக்கலாம். இதனால் ராக்கெட் விழுந்தாலும் எளிதில் தீ பற்றாது.
*  ஆடையின் பாக்கெட்டுக்குள் பட்டாசை வைத்துக் கொண்டு வெடிக்க கூடாது. கைகளில் வைத்தும் வெடிக்க கூடாது. பெரியவர் துணையுடன் வெடிக்க
லாம். பட்டாசு நேராக முகத்தை வைத்திருக்க கூடாது. தீடிரென்று வெடித்தால் முகத்தில் தான் காயங்கள் ஏற்படும். கண்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
*  பட்டாசு வெடிக்காமல் புகை மட்டும் வந்துக் கொண்டிருந்தால் அவற்றின் மேல் தண்ணீரை ஊற்றிவிட வேண்டும்.
*  எரிந்து விட்ட மத்தாப்புகள், தீக்குச்சிகளை நீர் நிறைந்த பக்கெட்டில் போட்டுவிடுங்கள். கீழே எரிவதால் எவரேனும் மிதித்து விட வாய்ப்புள்ளது.

தீக்காயம் பட்டால் செய்யவேண்டியது:

*  உடலில் எங்கேனும் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் உடனடியாக தண்ணீரை ஊற்றிவிட வேண்டும். அதன் பிறகு சுத்தமான வெள்ளை பருத்தி துணியில் தீ பட்ட இடத்தை, போர்த்திக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
*  தீக்காயம் பட்ட இடத்தில் இங்க் தடவுவது, சாக்கு போட்டு தீயை அணைப்பது, வாழை சாறு தட
வுவது, ஐஸ் வைப்பது, ஆயின்ட்மெண்ட் பூசூவது, மஞ்சள் தேய்ப்பது போன்றவற்றை செய்யகூடாது. இதனால், காயம்தான் இன்னும் ஆழமாகும். காயத்தின் நிலையை கண்டறிய மருத்துவர்கள் சிரமப்படுவர். சிகிச்சைக்கு பிறகு காயம் குணமாவதற்கு நீண்ட நாட்களாகும்.
*  தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீர் தான் முதல் மருந்து. நீர் ஊற்றினால், கொப்பளம் வருவதில்லை. அப்படியே கொப்பளம் ஏற்பட்டாலும், தீக்காயம் ஆழமாக போகவில்லை என்று மகிழ்ச்சி அடையுங்கள். கொப்பளம் ஏற்படவில்லை என்றால் அந்த காயம் சருமத்தின் உள்வரை சென்றிருக்கிறது என்று அர்த்தம்.
*  முடிந்தவரை வெடி சத்தம் குறைந்த பட்டாசுகளை வெடிப்போம். சுற்றுசூழலையும் அதை சார்ந்த மற்ற உயிரினங்களையும் பாதுகாப்போம். பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவோம்.

ஆடைகளில் கவனம்

*  உடை மெல்லியதாக இருக்க வேண்டாம். பருத்தியால் ஆன உடை, ஜீன்ஸ் அணிவது நல்லது. எளிதில் தீ பற்றாது.
*  உடைகளை, தழைய தழைய அணியக் கூடாது. நீண்ட ஸ்கர்ட், லூஸ் பைஜமா, நைலான், சின்தடிக், வேஷ்டி போன்ற ஆடைகளை அணியக் கூடாது.
*  பட்டாசு வெடிக்கும் போது கட்டாயமாக காலணிகளை அணிய வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளை தவிர்க்கவும். ஒடி வரும் போது கீழே தடுக்கி விழ வாய்ப்புகள் அதிகம்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை கண்காணித்தபடியே இருக்கவேண்டும்.  தீ சுடும் என்பது தெரியாமல், எடுக்க போகலாம்.

அனைவரின் இல்லத்திலும் ஆனந்தம் பெருக தீபாவளி வாழ்த்துக்கள்!
    விகடன் 21 அக்டோபர் 2014
  • /

Monday, October 20, 2014

மழை ...மழை ....மாமழை ::ஒருநாள் மழைக்கே மிதக்கிறது சென்னை: வரலாறு காணாத வகையில் 16 செ.மீ. மழை பதிவு

திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மழை நீரில் திணறும் வாகனங்கள். | படம்: க. ஸ்ரீபரத்
திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மழை நீரில் திணறும் வாகனங்கள். | படம்: க. ஸ்ரீபரத்

சென்னை மாநகரப் பகுதியில் வரலாறு காணாத வகையில் 16 செ.மீ. மழை கொட்டியுள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகள், சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் தமிழகத்தின் உள் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணி அளவில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை நேரம் ஆகஆக வலுத்தது. விடிய விடிய அடைமழையாகப் பெய்தது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மழைநீர் அகற்றும் பணி

விடாது மழை கொட்டுவதால் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. ரயில்வே, சாலை சுரங்கப் பாதைகளில் மழைநீர் புகுந்தது. இதனால் நேற்று காலை போக்குவரத்து முடங்கியது. தேங்கிய மழை நீரை லாரிகள், நீர் இரைக்கும் இயந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். எழும்பூர் மாநிலப் பள்ளி அருகே உள்ள சுரங்கப் பாதையில் மழைநீர் அதிக அளவில் நிரம்பியுள்ளதால், நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

பிளாஸ்டிக் பைகளால் அடைப்பு

பலத்த மழையால் மாநகரப் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் பிளாஸ்டிக் கேரிபேக், தெர்மோகூல் போன்றவை அடைத்துக்கொண்டதால் மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியது. கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் ஏற்பட்ட அடைப்பு, பொக்லைன் உதவியுடன் நீக்கப்பட்டது.

அவ்வாறு நீக்கப்பட்ட பிளாஸ்டிக், தெர்மோகூல் குப்பைகள், லாரியில் 7 லோடு அளவில் அகற்றப்பட்டன. பல பகுதிகளில் கால்வாயில் இருந்த புதர்கள் அகற்றப்படாததாலும் அடைப்பு ஏற்பட்டது. மழையால் மாநகரப் பகுதியில் 33 மரங்கள் விழுந்தன. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.

மாநகராட்சி நடவடிக்கை

மழை பாதிப்புகளை சரிசெய்யும் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் கூறியதாவது: எதிர்பாராத அளவுக்கு மழை கொட்டியுள்ளது. ஒரு நாளில் 16 செ.மீ. என்பது சென்னை சந்தித்திராத மழை அளவு. பல சாலைகள், 12 சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை சரிசெய்துவிட்டோம்.

வரலாறு காணாத மழை என்பதால், அதிகப்படியான மழைநீர், கால்வாய்கள் மூலமாகத் தான் வடியவேண்டும். பல வாய்க் கால்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைப்பை ஏற்படுத்தின. அவற்றை அகற்றி, நீரை வெளியேறச் செய்து வருகிறோம். பிளாஸ்டிக் குப்பைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். விதிகளை பின்பற்றாமல் பிளாஸ்டிக் குப்பைகள் வெளியில் வீசப்படுகின்றன. இதனால் மழைநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு, நீர் வடிவதில் சிரமம் ஏற்படுகிறது.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால்கள் அனைத்திலும் ஆகாயத்தாமரை செடிகள், புற்கள், புதர்களை மழைக்கு முன்பாகவே அகற்றிவிட்டோம். மாநகராட்சி பகுதியில் சில வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதை அவர்கள்தான் அகற்றவேண்டும்.

இவ்வாறு விக்ரம் கபூர் கூறினார்.


தி இந்து:திங்கள், அக்டோபர் 20, 2014