Friday, September 26, 2014

கொஞ்சம் சினிமா ...கொஞ்சம் பாப்கார்ன், : 'ஐ'

இயக்குநர் ஷங்கர் | கோப்புப் படம்
இயக்குநர் ஷங்கர் | கோப்புப் படம்

நான் பிரம்மாண்டத்தைப் பின்தொடர்வது ஏன்?- இயக்குநர் ஷங்கர் விளக்கம்


'ஐ' படத்தின் நாயகனாக நடிகர் விக்ரமை தவிர வேறொரு நடிகர் நடித்திருப்பாரா என்பது சந்தேகமே என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்திருக்கும் 'ஐ' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

தனது 'ஐ' படம் குறித்து இயக்குநர் ஷங்கர், சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் இயக்குநர் ஷங்கர் கூறியவற்றின் முக்கிய அம்சங்கள்:

"'ஐ' படத்துக்காக விக்ரமின் ஒத்துழைப்பு என்னை வியக்க வைத்தது. வேறு ஒரு நடிகர் இப்பாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பாரா என்பது சந்தேகமே. இப்படத்தில் நடிப்பதற்காக நான் விக்ரமை மட்டுமே அணுகினேன். தற்போது நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். தலையை மொட்டையடிக்க வேண்டும் என்றவுடன், வேறொரு நடிகராக இருந்தால் தயங்கி இருப்பார். ஆனால், விக்ரம் 'ஐ' படத்திற்காக எதையும் செய்யத் தயாராகவே இருந்தார்.

இப்படத்திற்கு ஏன் அதிக பட்ஜெட் என்பது நீங்கள் திரையில் பார்த்தால் தெரியும். தற்போது ரசிகர்கள் தொலைக்காட்சியில் அதிகமான படங்களைப் பார்த்து நாளுக்கு நாள் மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பெரிய பெரிய விஷயங்களை எதிர்பார்த்து திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களை நாம் திருப்திப்படுத்த வேண்டும். பிரம்மாண்டத்தை எதிர்பார்த்துதான், எனது படத்திற்கு வருகிறார்கள். அவர்களை நான் திருப்திபடுத்த வேண்டும்.
சீன மொழியில் படத்தை டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டது தயாரிப்பாளரின் எண்ணம்தான். 

நாங்கள் சீனாவில் படப்பிடிப்பு நடத்தும்போதே, அங்குள்ள மக்கள் படத்தைப் பார்க்க விரும்பினார்கள்.

ரசிகர்கள் என்னிடம் சின்ன பட்ஜெட் படங்களைக் காண விரும்பினால், இயக்கத் தயாராகத்தான் இருக்கிறேன். 

ஆனால், ஷங்கரிடம் இருந்து பிரம்மாண்டத்தைதான் விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வதைதான் நான் செய்துக்கொண்டிருக்கிறேன். பெரிய பட்ஜெட் படங்கள் இயக்குவது போர் அடிக்கும்போது சிறு பட்ஜெட் படங்கள் இயக்குவேன்.

ஆனால், பெரிய பட்ஜெட் படங்கள் இயக்குவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. 

என்னுடைய கற்பனைக்கு பிரம்மாண்டமான பட்ஜெட் தேவைப்படுகிறது" என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.

தி இந்து:வெள்ளி, செப்டம்பர் 26, 2014

Tuesday, September 23, 2014

5 things to do in Chennai

5 things to do in Chennai

Get that heritage feel
Be prepared to spend at least two hours at the if not more at this well-preserved Shore Temple in Mahabalipuram, which is a definite must-see. Overlooking the shore of the Bay of Bengal, the temple is dedicated to Lords Shiva and Vishnu and its statues display different scenes from the Mahabharat. It is listed as a UNESCO World Heritage Site. Another place worth visiting is Dakshin Chitra, a heritage village where you can engage in varied cultural activities. You can try your hand at weaving and pottery or witness different cultural shows or learn about the types of houses in South India. With a host of activities on offer, plan to spend your entire day here.
Visit Loyola College
Located in Nungambakkam, in the heart of Chennai, Loyola College is one of the oldest Jesuit colleges in India. It was started in the year 1925 and is recognised as the best college to pursue a degree in Commerce, in Chennai. The 100-acre campus consists two football fields, one tennis court, a volleyball court, a basketball court and a hockey court. You can take a tour around the college and the campus, which also houses animals and a dairy farm. Visit the campus church and take in its breathtaking gothic architecture. Soak in the serenity and peace. The campus also has other institutes like a Teacher Training institute, Engineering college and a Management college. You will need approximately an hour to tour the entire campus.
Hit the beaches
With a beautiful promenade, Marina Beach is perfect for an evening stroll or a run in the morning. The beach is clean and the evenings see a flurry of activities; several stalls sell street foods like gola, butta and bhajjis; there are giant wheels and other carnival games like shooting the balloons, throw the ring etc. While the current is unpredictable, swimming may not be ideal at this beach, but you'll still find plent of people here on weekends. The best thing to do is just enjoy a picnic snack or take a stroll along the shore. But if you want to avoid the crowd, Besant Nagar Beach is perfect to walk, relax and eat. If you can swim well, you might want to try the catamaran ride at Kovalam Beach. You are taken in a fishing boat to the middle of the sea, with a life jacket, of course. A rope is let out and you jump in the middle of the sea, where you can float around and relax for an hour or so before you are lifted back into the boat and brought back to the beach. A truly relaxing experience, it is one of the best ways to start your weekend. It starts from around 9 am till about 4 pm and one boat can accommodate approximately 20 people.
For the foodies
Foodies, head to Saravana Bhavan in Anna Nagar, for their speciality dosas. A must try is the Ghee Roast dosa. Their green and white coconut chutneys complement their super-crisp dosas, which simply melt in your mouth. While they have several branches all over Chennai and in other parts of India, you'll find Saravana Bhavan branchees even in New York, San Jose, Paris, London and Dubai. If you're in the mood for idlis, Murugan Idli is where you should be at. You could also try Sangeetha's which serves one of the best for South Indian breakfast of idli-vada and pongal combination. Wash it down with a heady filter coffee.
For the shopaholics
You can't leave Chennai without shopping for Kanjeevaram. Your choices are plenty—Nalli Silk Sarees, Pothy's, Kumaran Silks, RMKV. The price ranges from a few thousdands to a lakh or two or more. If gold is on your mind, head to GMT for uniqe designs and patterns. If you are looking for coloured pearls, head to Narayan Pearls or if temple jewellery is what allures you, take a walk down Pondy Bazaar. Try your hand at being a local and wear a mogra in your hair.
With inputs from Srini Nagarajan
​Images by Rebecca Martin
 Z news  Rebecca Martin Monday, September 22, 2014 - 09:17

தனிமையுடன் கைக்குலுக்குவோம்



நாம் ஒவ்வொருவரும் தனியாகத்தான் இருக்கிறோம். அந்தத் தனிமையை நாம் புரிந்து கொள்ளாத வரையில் அது நம்மை அச்சுறுத்துகிறது. தனிமை நமக்குள் வெறுமையுணர்வை உண்டாக்குகிறது. மனம் இந்த நிலையை எதிர்கொள்ள முடியாமல், கையாள முடியாமல் தவிக்கிறது. யாராவது ஒருவரை வைத்து அந்த வெறுமையை நிரப்ப முயல்கிறோம்.

உறவு என்பது வெறுமையை நிரப்பும் சாதனமாகப் போய்விடுகிறது. அந்த ஒருவர் என்ன செய்துவிடுவாரோ, வேறெங்காவது சென்றுவிடுவாரோ, வேறு யாராவது அவரைத் தம் வலையில் இழுத்துக்கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் மனத்தை வாட்டுகிறது.

மனம் அந்த நபரைப் பிடித்துக்கொண்டு தவிக்கிறது. தொடக்கத்தில் மகிழ்ச்சியைத் தந்த உறவு இப்போது வேதனை மிகுந்ததாக மாறுகிறது. இந்த நிலைக்குக் காதல் என்ற பெயர் தந்து இன்னும் சிக்கலை அதிகமாக்கிக் கொள்கிறோம்.

மனத்துக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. என்ன இருக்கிறது என்பதை விட, இல்லாதது என்ன என்பதே மனத்துக்கு முக்கியமாக இருக்கிறது. இருப்பதைக் கொண்டாடி மகிழ்வதை விட, இல்லாததை நினைத்து நினைத்து ஏங்குவது மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

உள்ளதை உள்ளபடி பார்ப்பது அறிவுணர்வின் தன்மை. இல்லாததை நினைவில் இருந்து கொண்டு வருவது மனதின் தன்மை. அறிவுணர்வு அமைதியை அளிக்கிறது. மனம் வேதனையைத் தருகிறது. இல்லாததை நினைவில் கொண்டுவந்து மனம் ஏங்குவதையும் காதல் என்று நினைத்துக்கொள்கிறோம்.

1. நான் எம்.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. என் அப்பா இறந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. எனக்கு ஒரு அண்ணன். அவர் திருமணத்துக்குப் பிறகு என்னையும் அம்மாவையும் அடியோடு மறந்துவிட்டார். எனக்கு அன்பு காட்டவோ, அக்கறை செலுத்தவோ யாரும் இல்லை. 

என் வீட்டில் அன்பு காட்ட யாரும் இல்லாததால், கல்லூரித் தோழிகளிடம் நான் மிகுந்த அன்புடன் பழகுவேன். ஆனால், அவர்களால் என் அன்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என் அன்பை உதாசீனப்படுத்துகிறார்கள். அதனால் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறேன். படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

தோழிகளிடம் அன்புடன் பழகுகிறேன் என்று நீங்கள் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் உங்கள் அன்பை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று நீங்கள் சொல்லும்போது நீங்கள் அன்பு காட்டுவது என்பதை அவர்களிடமிருந்து நீங்கள் அன்பைப் பெறுவதற்கான வழியாகப் பயன்படுத்துகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நீங்கள் எதிர்பார்ப்பது அன்பு அல்ல. அங்கீகாரம். நீங்கள் வேதனை அடைவதற்குக் காரணம், உங்களை நீங்களே இன்னும் முழுமையாக அங்கீகரிக்காததுதான் என்று படுகிறது.

அப்பா இறந்துவிட்டார். அம்மா நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அண்ணன் கவனிக்காமல் போய்விட்டார். தோழிகள் உதாசீனப்படுத்துகிறார்கள். உங்களிடம் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும்படியான விஷயம் எதுவும் இல்லையா? அப்படி இருக்க சாத்தியம் இல்லை. உங்களிடமும் உங்கள் வாழ்விலும் நீங்கள் கொண்டாடும்படியான விஷயங்கள் சில இருக்கத்தான் செய்யும்.

அவற்றைக் கண்டுபிடியுங்கள். கொண்டாடத் தொடங்குங்கள். மற்றவர்களிடத்திலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை முதலில் நீங்கள் உங்களுக்கு அளிக்கத் தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கை திசைமாறுவதை நீங்களே பார்ப்பீர்கள். உங்கள் கவனம் உங்கள் மீது திரும்பும்போது உங்கள் படிப்பிலும் கவனம் ஏற்படும். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள்.

2. நான் வேலையில் சேர்ந்த முதல் நாள் அவரைக் கண்டேன். கண்டதும் காதலில் விழுந்தேன். அவரைப் பார்த்தபோது நான் உணர்ந்தது காதல்தான் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது. அடுத்த நாள் நேரடியாக அவரிடம் சென்று என் மன உணர்வை வெளிப்படுத்தினேன். அவர் சிரித்துக் கொண்டே என்னை கடந்துச் சென்றார். காலப்போக்கில் என்னிடம் நட்புடன் பழக ஆரம்பித்தார். நேரம்காலம் தெரியாமல் பேச ஆரம்பித்தோம். 

“எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. ஆனால், காதல் இன்னும் வரவில்லை” என்றார். நானும் என்றாவது ஒரு நாள் என் மீது அவருக்கு காதல் வரும் என்ற நம்பிக்கையில் என் காதலை வளர்த்து வந்தேன். ஆனால் சமீபத்தில் அவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிய போது, “அம்மா எனக்கு திருமணம் நிச்சயம் செய்துவிட்டார்கள். எனக்கு யாரோ ஒரு பெண்ணோடு திருமணம் நடந்தாலும் நம் உறவில் எந்த மாற்றமும் இருக்காது” என்றார். என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அடுத்த மாதம் அவருக்கு யாரோ ஒரு பெண்ணோடு திருமணம். ஆனால் இப்பொழுதும் நாங்கள் முன்பு இருந்ததைப் போலவே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். என்னால் அவரை விட்டு விலக முடியவில்லை. என்ன செய்வது?

நீங்கள் உங்களைக் கொஞ்சமாவது மதிக்கிறீர்களா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்றே எனக்குத் தெரியவில்லை. உங்களை நீங்கள் யாராகப் பார்க்கிறீர்கள்? மற்றவர்களை என்னவாகப் பார்க்கிறீர்கள்? குறிப்பாக அந்த மனிதரை? அவர் உங்களை என்னவாகப் பார்க்கிறார் என்பது பற்றி எப்போதேனும் சிந்தித்திருக்கிறீர்களா? 

இந்தக் கேள்விகள் எதுவும் உங்களுக்கு முக்கியமாகப் படவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கேள்விகளை நீங்கள் ஆழமான தீவிரத்துடன் கேட்டுக்கொள்ளாத வரை உங்கள் வாழ்வில் எந்தவிதமான அர்த்தமும் இருக்க வாய்ப்பில்லை என்றுதான் படுகிறது.

சற்று கவனம் செலுத்தி உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்ச நாட்களுக்கு அவரிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். எந்த விதத்திலும் இந்த உறவு உங்களை மேன்மைப்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உளவியல் ஆலோசகர் ஒருவரை நீங்கள் சந்திப்பது அவசியம். உங்கள் மதிப்பை நீங்கள் உணர்ந்துகொள்வதற்கும் உங்களை ஒரு பொருட்டாக நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கும் அந்தச் சந்திப்பு வழிவகுக்கும்
தி இந்து: செப்டம்பர் 19, 2014

கூகுளில் சென்னையின் புதல்வர்

‘இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா’ என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006 -ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்து விட்டது.

கூகுள் சாம்ராஜ்யம்

எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது,கெட்டது,சரி,தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய இணைய உலகில் கூகுள் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. 52 ஆயிரம் பேருக்கும் மேலாக தற்போது இந்த கம்பெனியில் பணியாற்றுகின்றனர்.

அத்தகையப் பெரும் இணைய சாம்ராஜ்யத்தின் முதுநிலை துணைத்தலைவராகத் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார். ‘ஆண்ட்ராய்ட் ஒன்’ என்பதைப் புதிதாக கூகுள் அறிவித்த போது அவர் பிரபலமடைந்தார்.

ஆலமரமாய்…

சுந்தர் பிச்சை 2004-ம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார். 2011- ல் கூகுள் குரோம் ப்ரவுசர் ,
ஜிமெயில், ஆப்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான உலகளாவிய பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

2013 முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருளுக்கான பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
1998- ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் எனும் இரண்டு நண்பர்களால் இந்த கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.
ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தகவல்கள் கூகுளில் தேடப்படுகின்றன. அதி விரைவாக கூகுள் வளர்ச்சியடைந்துள்ளது.பல புதிய மென்பொருள் சேவைகளும் அதனால் வெளியிடப்பட்டுள்ளன.

ஜிமெயில் எனப்படும் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு கிளைகளை பரப்பி பிரம்மாண்டமான ஆலமரமாய் அது வளர்ந்துள்ளது.ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகள் ரூபாய் மதிப்பில் அதன் வியாபாரம் விரிந்துள்ளது.

விரியும் ஆதிக்கம்

சமீபத்தில் குரோம் ப்ரவுசர் என்னும் இணைய உலவியையும் கூகுள் வெளியிட்டது. அது தற்போது இணைய ப்ரவுசர்களின் மார்க்கெட்டில் 32 சதவீதத்தை கைப்பற்றி உள்ளது.
ஆண்ட்ராய்டு என்னும் செல்போனை இயக்கும் மென்பொருள்தளத்தையும் அது வெளியிட்டது. அதனால் செல்போன்களின் துறையில் பெரும்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கைகளில் விளையாடும் டச் ஸ்கிரீன் செல்போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் எனும் மென்பொருளும் ஒரு காரணம். தற்போது செல்போன் உள்ளிட்ட 120 கோடி கருவிகளில் ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்படுகிறது.

சென்னையின் புதல்வர்

சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தவர். மேல்படிப்புக்காக மேற்குவங்கத்தை சேர்ந்த கரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து படித்தாவர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்
எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ.
பட்டமும் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.

சுந்தர் பிச்சையைப் பற்றி கூகுள் நிறுவனத்தின் தலைவரான லாரி பேஜ் “அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கண்காணிப்பு, தொழில் முனைப்புத் திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்” எனப் பாராட்டுகிறார்.

சுந்தர் பிச்சையின் அப்பா சென்னையில் உள்ள பிரிட்டிஷ் பன்னாட்டு கம்பெனியான ஜிஇசியில் எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருந்துள்ளார். சுந்தர் பிச்சைக்கு 11வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

அடுத்த பாய்ச்சல்

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மென்பொருள் மூலம் தனது அடுத்த தயாரிப்புகளைத் திட்டமிட்டு வருகிறது. அவற்றில் தானே வழி அறிந்து செல்லும் கார், ஆண்ட்ராய்ட் டிவி மிக முக்கியமானவை கூகுள் திட்டமிடுகிற கார் தெருக்களில் ஒரு போது, இனி நீங்கள் உங்கள் காரில் எந்த இடத்துக்கு போக வேண்டும் எனக் குறிப்பிட்டு விட்டால் போதும்.



செயற்கைக்கோள்கள் மூலமாக உருவான வரைபடங்கள் மூலம் இயங்கும் கூகுள் மேப்ஸ் துணையோடு, உங்கள் கார் உலகின் எந்த மூலைக்கும் தரைவழியாகத் தானே வழிகளை அறிந்து செல்லும்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட டிவிகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது கூகுள் ஈடுபட்டுள்ளது. அப்படிப்பட்ட டிவிகள் வந்தால் அவை தற்போதைய தொழில்நுட்பங்களில் இயங்கும் டிவிகளை காலாவதி ஆக்கும். அவை புதிய தலைமுறை டிவிகளாக இருக்கும். உங்கள் குரல்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படக்கூடியவையாக இந்த டிவிக்கள் இருக்கும்.

கூகுள் கண்ணாடி எனும் கருவியை மாட்டிக்கொண்டாலே போதும் நம்மால் இணையத்தைப் பார்க்க முடியும் என அண்மையில் கூகுள் அறிவித்தது நினைவிருக்கலாம். அத்தகைய கருவிகள் இன்னமும் முழுமையாக மார்க்கெட்டுக்கு வரவில்லை. அவை எல்லாம் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன.

அத்தகைய திட்டங்களில் முக்கிய பங்காற்றுபவராக சுந்தர் பிச்சை உருவாகி உள்ளார். ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என அவர் அழைக்கப்படுகிறார்.


சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள்:



சென்னை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார். உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினை சோதித்து பார்த்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: "சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "அம்மா உணவகத்தை" தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மேலும், இந்த விழாவில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் "அம்மா உணவகங்கள்" கடந்த 2013-ம் ஆண்டு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டன.

அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக 21.2.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் இங்கு அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளோடு உடனிருப்பவர்களும் உணவு வகைகளை உட்கொள்வதால் அவற்றை மிகுந்த கவனத்துடன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரும் பயனளிக்கும் அம்மா உணவகங்களின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், திங்கள்கிழமையன்று 4 அரசு மருத்துவமனைகளில் "அம்மா உணவகத்தை" முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, பொது மக்களுக்கு உணவு வழங்கி விற்பனையைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தி இந்து: செவ்வாய், செப்டம்பர் 23, 2014

உங்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் சர்வ வல்லமை பெற்றவர் நீங்கள் தான்



ஒரு வாசகர் நான் மேலதிகாரிகள் பற்றி எழுதியதைப் பாராட்டி எழுதி இருந்தார். மேலதிகாரிகளால் அவர் வாழ்க்கையில் நடந்த பாதிப்புகள் பற்றி மின்னஞ்சலில் பட்டியலும் இட்டிருந்தார். இதனால் பல உடல் உபாதைகளில் அவதிப்படுவதாகவும், இதிலிருந்து மீள என்ன வழி என்றும் கேட்டிருந்தார்.

கடித வழி உளவியல் ஆலோசனையில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், அவர் சுகமடைய சுருக்கமாக ஏதாவது எழுத நினைத்தேன்.

மறதி மருந்து

“உங்களைக் காயப்படுத்தியவர்களை மன்னித்து அவர்களை உங்கள் மனதிலிருந்து வெளியேற்றுங்கள்.
மறதிதான் சிறந்த மருந்து.
அப்போதுதான் புதியவர்கள் உங்கள் மனதுக்குள் நுழைவார்கள்.
நல்ல அனுபவங்கள் தருவார்கள்!”
என்று இத்தகையவர்களுக்கு நாம் சொல்லலாம்.
வேலையில் சிக்கல் உள்ள அனைவருக்கும் சிலர் மீது உள்ள கசப்பான உணர்ச்சிகள்தான் மேலோங்கி நிற்கின்றன.
அவை அந்த வேலையின் மற்ற நல்ல நினைவுகளைத் தலை தூக்கவிடாமல் செய்கின்றன. அதனால் ஒரு ஒட்டுமொத்த எதிர்மறை எண்ணம்தான் உருவாகிறது.
வேலையில் மட்டுமா இது நடக்கிறது?

ரயிலில் கேட்டது இது: “நம்ம கல்யாணத்தன்னைக்கே பிரச்சினை பண்ணியவன் இல்ல உன் தம்பி! மறு வீட்டுக்கு வரவே இல்லையே. அதெல்லாம் மறந்துடுமா?” என்று ஒரு ஆக்ரோஷமான குரல். எட்டிப் பார்த்தால் மனிதருக்கு எண்பது வயதிருக்கும். பழுத்த பழமான அந்த அம்மாள் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்!

ஒரு அம்பது வருட காயத்தைக் கீறிக் கீறிப் புதிய ரணமாகவே
வைத்திருக்கும் குரோதம் அவர் கண்களில் தெரிந்தது.



சண்டையில்தான் சரித்திர நிகழ்வுகள் சரியாக நினைவுக்கு வரும்.
எல்லா நல்ல விஷயங்களும் பின்னுக்குத் தள்ளப்படும்.
எடுத்த விவாதத்திற்குச் சாதகமான அனைத்தும்
தெளிவாகக் கண் முன் நிற்கும்.

“எங்கப்பா தான் இந்த வேலையில் தள்ளிட்டார்.”

“அந்த ஆள் மட்டும் டிரான்ஸ்பர் பண்ணாம இருந்தா அங்கயே பெரிய ஆளா இருந்திருப்பேன்”
“என் மனைவி ஃபாரின் போகணும்னு பிடிவாதமா இருந்தாள். அதனால்தான் அங்க போய் மாட்டினேன்.”

“சம்பளத்தைக் குறைச்சு ஃபிக்ஸ் பண்ணி என் எதிர்காலத்தையே நாசம் பண்ணிட்டார்.”

இப்படிச் சில மனிதர்கள்தான் நம் வேலையையும் வாழ்க்கை யையும் கெடுத்துவிட்டார்கள் எனத் திடமாக நம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள்.



தன் வாழ்க்கையின் அத்தனை துயரங்களுக்கும் இவர்கள் தான் காரணகர்த்தாக்கள் என்ற கற்பிதத்தோடே இவர்கள் வாழ்கிறார்கள்.
தங்களின் திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டும் எதிராளியின் பராக்கிரமத்தை அதிகப்படுத்தியும் இவர்கள் ஆடும் விளையாட்டு சுய பரிதாபத்தில்தான் முடியும்.

ஒரே ஒரு ஆள்தான் உங்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் சர்வ வல்லமை பெற்றவர்: அது நீங்கள் மட்டும்தான்!

மன்னித்தலின் பலன்களை மதங்கள் அனைத்தும் போதிக்கின்றன.
மன்னித்தலும் மறத்தலும் எவ்வளவு பெரிய மன விடுதலையைத் தரும் என மன்னித்தவர்களுக்குத்தான் தெரியும்.

பழைய காயங்கள் ஆற
அவற்றை
மீண்டும் தீண்டாமல் இருப்பது முக்கியம்.

ஆனால் வெறுமையான மனதுக்கு கடந்த காலமும்
அதன் கசப்பான எண்ணங்களும்தான் மிஞ்சுகின்றன.

நான் அதிகம் மதிக்கும் நண்பர் ஒருவர் முப்பது வயதுகளிலேயே பெரிய பதவிகள் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

அவருடன் பழகி நான் கற்றுக்கொண்டது ஒன்று தான்:

“எந்த விஷயத்திலும் எதிராளியைப் பழி சொல்லக் கூடாது.”
 ‘இது நிகழாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?’
 என்று மட்டுமே அவர் யோசிப்பார்.
அவரை எதிர்க்கும் சிலருடன் கூட நட்பை இழக்க மாட்டார்.
தன் எதிர்ப்பைக் கண்ணியமான சொற்களில் பதிவு
செய்து விட்டுத் தன் நிலையைக் காத்துக் கொள்வார்.

தொடர்ந்து வெற்றி பெறுகிற அவரின் சூத்திரங்கள் இவை தான்.
எல்லா முடிவுகளுக்கும் தானே காரணம் எனத் திடமாக நம்புவது;
அதற்கான உழைப்பைத் தொடர்ந்து தருவது.
ஒரு கடந்த கால கசப்பான அனுபவம் பற்றிப் பேச்சு வந்த போது சொன்னார்:
“ஓ, அது நடந்ததே மறந்து போச்சு.”

பிரெஞ்சு நாட்டின் தலைமைச் செயல் அதிகாரி என்னுடன் பேசும்போது சொன்னார்: “
இந்தியர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள்.
காயப்படுகிறார்கள்.
ஆனால் அவற்றை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதில்லை.
செயலில் காட்டுகிறார்கள்!”
அவரை மறுத்துப் பேச முடியாமல் தலை ஆட்டினேன்.

வேலையில் மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் நிகழ்காலத்தில் இருப்பவர்கள்.
அது தரும் அனுபவத்தில் திளைப்பவர்கள். வருங்காலத்தை நம்புபவர்கள்.




அதெல்லாம் சரி, மோசமான பணி அனுபவத்திலிருந்து மீள் வது எப்படி?
மன்னிப்பது எப்படி?
உங்களுக்கு மோசமான அனுபவம் அளிப்பவரும் மோசமான அனுபவம் உட்கொண்டவர்தான். வெறுப்புக் கொள்வதைவிட பரிதாபம் கொள்ளுங்கள்.
அவரைக் கையாள்வதும் ஒரு வாழ்வியல் கலை.
அதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இது வெறும் பணி இடர்பாடு என்று அறிந்து கொள்ளுங்கள்.
இதை உங்கள் ஆளுமையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.

இந்த அனுபவத்திலிருந்து அவரும் நீங்களும் நிறைய கற்றுக்கொள்வீர்கள்.
காலம் தன் சுழற்சியில் யாரை எங்கு வைக்கும் எனத் தெரியாது.
அதனால் வெறுப்பு வளர்க்காமல் கடமையைச் செய்யுங்கள்.

மனதை அமிலப்பாத்திரமாக்கி அதைக் காலம் முழுவதும் காக்க வேண்டாம்.
மனதைக் கழுவிவிட்டு... ஓ... இங்கிருந்து தான் ‘கழுவி கழுவி ஊற்றுவது’ வந்ததோ?)
புதிய பானம் நிறையுங்கள்.

மன்னிப்பைவிட வலிமை யான ஆயுதம் எதுவுமில்லை.
மறதியைவிடச் சிறந்த மன மருந்து எதுவுமில்லை.

நிறைய வரலாறு படியுங்கள்.
கேளுங்கள். 
வரலாறு என்பது வெறும் சம்பவங்களின் கோவை அல்ல. 
அது தந்த பாடங்களின் தொகுப்பு.

தி இந்து: செவ்வாய், செப்டம்பர் 23, 2014

Monday, September 22, 2014

தினமும் 1.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் திருட்டு:

கோப்பு படம்

ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்தது தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
விழுப்புரம், வேலூர், திருவண் ணாமலை உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து சென்னைக்கு வரும் ஆவின் டேங்கர் லாரிகளை திண்டிவனம் அருகே நிறுத்தி, பால் திருடியது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. திருடும் பால் அளவுக்கு டேங்கரில் தண்ணீர் கலந்துள்ளனர். 

இதில் தொடர்புடைய திருவண்ணாமலை சுரேஷ், சத்தியராஜ், ரமேஷ், ராணிப்பேட்டையைச் சேர்ந்த குணா, முருகன், சுரேஷ், அன்பரசன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் கலக்கப்பட்ட பாலின் தரம் சரியாக இருப்பதாக தினமும் சான்றிதழ் அளித்த ஆவின் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீ ஸாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஒரு டேங்கர் லாரியில் இருந்து 1,500 முதல் 2 ஆயிரம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு, அதே அளவு தண்ணீர் ஊற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் தினமும் 83 லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் வரை பாலை திருடி தனியாருக்கு விற்றுள்ளனர். மேலும் 155 ஆவின் பூத்கள் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சென்னை அசோக்நகரைச் சேர்ந்த வைத்தியநாதன் (44) தலை மறைவாக இருந்தார். அவரை ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் சிபிசிஐடி போலீஸார் தேடிவந்தனர். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் அவரை கைது செய்தனர். சிபிசிஐடி அலுவலகத் தில் வைத்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. இந்த கலப்பட மோசடிக்கு முக்கியப் பிரமுகர்கள் சிலர் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அசோக் நகர் 55 வது தெருவில் உள்ள (எப்.8 மற்றும் எப்.12) வைத்தியநானின் 2 வீடுகளில் சிபிசிஐடி சூப்பிரண்டு நாகஜோதி தலைமையில் 15 போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். காலை 7.30 முதல் 11.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு
இதைத் தொடர்ந்து வைத்திய நாதனை உளுந்தூர்பேட்டை நீதிமன் றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை அக்டோபர் 1-ம் தேதி வரை விழுப்புரம் கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பால் கலப்பட விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக் கலாம் என கூறப்படுவதால் வைத்தி யநாதனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த விசா ரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த வைத்தியநாதன்?
கடந்த 2000-ம் ஆண்டு ஆவின் நிறுவனத்தின் சில்லரை விற்பனையாளராக பணியை தொடங்கியவர் வைத்தியநாதன். பின்னர், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு பிரிவு களில் பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து, கூட்டுறவு ஒன்றியங் களில் இருந்து ஆவின் நிர்வாகத் துக்கு பால் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றார். தென்சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராகவும் இருந்தார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் தனது ஒப்பந்தத்தை புதுப்பித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக 83 டேங்கர் லாரிகள் கூட்டுறவு ஒன்றியங்களில் இயங்கி வருகின்றன. 

ஆரம்பத்தில் சிறிய அளவில் பாலில் கலப்படம் செய்து வந்துள்ளார். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் ஏற்பட்ட நெருக்கத்தைத் தொடர்ந்து பெரிய அளவில் கலப்படம் செய்துள் ளார். இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து, வைத்திய நாதன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தி இந்து:திங்கள், செப்டம்பர் 22, 2014

அறக்கட்டளைக் கூட்டங்களுக்கு தயாராகும் எம்.ஏ.எம்.ராமசாமி: முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்



தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி யின் புகாரை அடுத்து சென்னையி லுள்ள அவரது செட்டிநாடு அரண்மனையில் இருந்த கண்காணிப்புக் கேமராக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது வளப்பு மகன் ஐயப்பன் என்கிற முத்தையாவுக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்புகளை அடுத்து சென்னையிலுள்ள செட்டிநாட்டு அரண்மனையில் சில அதிரடி மாற்றங்கள் செயப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அரண்மனையில் முக்கியப் பகுதிகளில் கண்காணிப் புக் கேமராக்கள் பொருத்தப்பட் டன. 

இதையடுத்து, தன்னை தனிமைப்படுத்த முயற்சிப்பதாக வும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் எம்.ஏ.எம்.ராமசாமி. இதுதொடர்பாக போலீஸ் விசாரித்த போது, அப்பாவின் பாதுகாப்பு கருதியே கண்காணிப்புக் கேமராக் களை பொருத்தியதாக தெரிவித்தார் வளர்ப்பு மகன் முத்தையா.

இந்த நிலையில் செட்டிநாடு குழும இயக்குநர் மற்றும் தலைவர் பதவியிலியிருந்து தன்னை நீக்காமல் இருப்பதற்காக கம்பெனிகளுக்கான பதிவாளர் மனுநீதிச் சோழனுக்கு எம்.ஏ.எம்.ராமசாமி 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., இதுதொடர்பாக மனுநீதி சோழனை கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசா ரணயில் சில முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய அரண்மனை வட்டத்துக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: மனுநீதிச் சோழனிடமிருந்து கைப் பற்றப்பட்ட பணத்தை யார் வைத் தது என்ற விஷயமெல்லாம் கண் காணிப்புக் கேமராவில் பதிவாகி விட்டது. இதன் பின்னணியில் இருக்கும் சதியும் அம்பலத்துக்கு வந்துவிட்டது.

எனவே இந்த விஷயத்தில் எம்.ஏ.எம்-முக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகி விட்டது. இதையடுத்தே கண்காணிப்புக் கேமராக்கள் அப்புறப்படுத்தப்பட் டுள்ளன. மனுநீதிச் சோழனுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் இன்னும் பல புதிர்களுக்கு விடை கிடைத்துவிடும். வளர்ப்பு மகன் முத்தையா சிங்கப்பூர் குடியுரிமை பெறும் முயற்சியில் தீவிரமாக இருப்பதால் அவர் தன் மீது வழக்கு கள் ஏதும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, தற்போது உடல் நலம் தேறியுள்ள எம்.ஏ.எம்.ராம சாமி, அரண்மனை விவகாரங்களில் தனது பிடிமானத்தை ஸ்திரப்படுத்து வதற்காக 22-ம் தேதியிலிருந்து அறக்கட்டளைக் கூட்டங்களில் கலந்துகொண்டு சில அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாகக் கூறுகின்றனர்.
இதுபற்றி கூறியவர்கள், “ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் அறக்கட்டளைத் தலைவராக எம்.ஏ.எம். இருக்கிறார். இந்தக் கோயில் சம்பந்தப்பட்ட நகைகள் உள்ளிட்டவை முத்தை யாவின் பொறுப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், 22-ம் தேதி அறக்கட்டளையின் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார் எம்.ஏ.எம். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

25-ம் தேதி, எம்.ஏ.எம்.-மின் அண்ணி குமாரராணி மீனா முத்தையாவின் 81-வது பிறந்த நாள் விழா ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. 30-ம் தேதி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் (எம்.ஏ.எம்-மின் ஐயா) பிறந்த நாள் விழா ராணி சீதை ஹாலில் நடக்கிறது. ஏற்கெனவே அண்ணனின் பிறந்த நாள் நினைவு பரிசளிப்பு விழாவை புறக்கணித்த எம்.ஏ.எம். இந்த இரண்டு விழாக்களிலும் கட்டாயம் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

இந்த விழாக்களுக்கு முத்தையா வந்தால் அவருக்கு எதிர்ப்புக் காட்டவும் ஒரு குழு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுமாத்திரமில்லாமல், 27 அல்லது 29-ம் தேதி மதுரையிலுள்ள தமிழ் இசைச் சங்க அறக்கட்டளை கூட்டம் நடக்கிறது. இதன் தலைவராக எம்.ஏ.எம்.-தான் இருக்கிறார். இதன் செயலாளராக வளர்ப்பு மகன் முத்தையாவை பெற்ற தந்தையான சேக்கப்பச் செட்டியார் இருக்கிறார். அவரது பதவி காலம் முடிவுறும் நிலையில் இருப்பதால் அன்றைய கூட்டத்தில் சேக்கப்பச் செட்டியாருக்குப் பதிலாக புதிய செயலாளர் தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று கூறினர்.

தி இந்து:திங்கள், செப்டம்பர் 22, 2014

பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ்



சென்னை: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். 
அவருக்கு வயது 45. மாண்டலின் சீனிவாஸ் 1969-ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள பாலகோலில் பிப்ரவரி மாதம் 28ம் தேதி பிறந்தார். 

1994ம் மே 27ல் ஆந்திராவைச் சேர்ந்த யுவஸ்ரீயை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. யுவஸ்ரீக்கும் மாண்டலின் சீனிவாஸ்க்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்தானது. 

45 வயதான ஸ்ரீநிவாஸ் பத்ம ஸ்ரீ, சங்கீதா ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். கல்லீரல் பிரச்சனை தொடர்பாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்ட சீனிவாஸ் இன்று காலை 09.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மாண்டலின் ஸ்ரீநிவாஸனின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கதறியழும் தாய், தந்தைக்கு ஆறுதல் கூறும் உறவினர்கள். படம்: க.ஸ்ரீபரத்
மாண்டலின் ஸ்ரீநிவாஸனின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கதறியழும் தாய், தந்தைக்கு ஆறுதல் கூறும் உறவினர்கள். படம்: க.ஸ்ரீபரத்
பிரபல கர்னாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் கலையுலகினர், திரையுலகினர் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் (45) நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா, கடம் கலைஞர் விக்கு விநாயக் ராம், வீணை காயத்ரி உள்ளிட்ட இசை பிரபலங்கள், திரைத்துறையினர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடலுக்கு நேற்று காலை அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பிற்பகல் 2.15 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் திரைத்துறை, இசைத்துறையினர் ஏராள மானோர் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி அளவில் ஊர்வலம் பெசன்ட் நகர் மயானத்தை அடைந்தது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. மாண்டலின் ஸ்ரீநிவாஸின் பெற்றோர் சத்யநாராயணா - காந்தம்மாள் மற்றும் அவரது தம்பி மாண்டலின் ராஜேஷ் ஆகியோர் இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் தகன மேடைக்கு உடல் கொண்டு சென்று எரியூட்டப்பட்டது.

டிரம்ஸ் வாசித்து அஞ்சலி:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது ‘டிரம்ஸ்’ சிவமணி, டிரம்ஸ் வாசித்து சோகத்துடன் இசை அஞ்சலி செலுத்தினார்.

டிரம்ஸ் சிவமணி:

ராணுவ வீரர்கள், மாபெரும் தலைவர்கள் மறைவின்போது, டிரம்ஸ் ஒலிக்கப்பட்டு இறுதி மரியாதை அளிக்கப்படும். அதே பாணியில் டிரம்ஸ் ஒலித்து, இசை உலகின் அன்புக்குரிய மாண்டலின் ஸ்ரீநிவாஸை கடைசியாக வழியனுப்பி வைத்தேன். அவர் 9 வயது சிறுவனாக இருப்பதில் இருந்தே எனக்கு தெரியும். இசை உலகில் அவர் அடைந்த அபார வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்தவன் நான். அவரது மறைவு, இசைத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு. இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்:

சிறு வயது முதல் அவருடன் இருந்து வளர்ந்தவன் நான். மாண்டலின் ஸ்ரீநிவாஸிடம் இசையை மட்டுமல்லாது, புகழின் உச்சிக்கு சென்றாலும் எளிமையை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.

திரைப்பட இயக்குநர் பரத் பாலா:
கர்னாடக இசையையும், நமது கலாச்சாரப் பெருமையையும் உலக அரங்குக்கு கொண்டுசென்றவர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ்.

தி இந்து:திங்கள், செப்டம்பர் 22, 2014

Fire breaks out at TN Secretariat on Monday

Chennai: Fire breaks out at TN Secretariat on Monday











Chennai: A fire broke out at the Secretariat on Monday but it was immediately extinguished, officials said.
The fire broke out following a suspected short circuit in the AC unit of the information department, fire and rescue department officials said, adding, there were no casualties nor any major damage to property.
Government officials said it was a minor fire which was put out immediately and there was no need for any concern.

Government officials said it was a minor fire which was put out immediately and there was no need for any concern.

Six fire tenders were pressed into service to douse the blaze, officials added.
IBN Live 22 Sep 14

Navarathri:Chennai becomes the city of dolls

Mylapore’s North Mada Street houses vendors of dolls sourced from Krishnagiri, Delhi, Madurai and Panruti. Photo: M. Srinath
Mylapore’s North Mada Street houses vendors of dolls sourced from Krishnagiri, Delhi, Madurai and Panruti. Photo: M. Srinath



The usual haunts in Mylapore, Anna Salai and Kosapet draw vendors and customers

It’s that time of the year when even Facebook posts are all about preparations for Navarathri.

The city’s usual haunts, including North Mada Street in Mylapore, Khadi Kraft at Kuralagam, Khadi Gramodyog Bhavan, Poompuhar and Cauvery handicrafts on Anna Salai and Kosapet, are chock-a-block with people looking at the latest offerings in papier-mâché and clay art.

On Wednesday, Shanthi Swaminathan and her husband, residents of Kolathur, visited Khadi Kraft and Khadi Gramodyog to take a look at the dolls on sale.
“My daughters live in the U.S. and it is my granddaughters who decide the theme. We have so many dolls that we have an entire room for kolu dolls, decorations and the padi (steps) in our house. I started keeping kolu 15 years ago, and every year I have tried to make it look different,” she said.

The Khadi Gramodyog showroom has 95 different sets of dolls on offer, of which 11 are new introductions this year.

From end to end, Mylapore’s North Mada Street houses vendors of dolls sourced from Krishnagiri, Delhi, Madurai and Panruti. Three members of a family, Jayalakshmi Devaraj, Sudha Santhakumar and Rajeshwari Chandrasekar, have been setting up shop here for three generations now.

“Several decades ago, our grandmother, Dhanabagyam, sold dolls here for Krishna Jayanthi. When people started asking for other dolls she started a small business that has been handed down to us now. For 40 days, we camp here and go home for sometime daily. We sleep on the pavement as we have to take care of the dolls,” said Rajeshwari.
Ramapuram resident Divya Bharath, whose first kolu this is after marriage, said she liked to shop at Mylapore as there was more variety and she could strike a good bargain.
The social networking site is also brimming with ideas for decorations, food items and gifts for visitors. Viji Ganesh, a cause ambassador for awareness and prevention of child sexual abuse and a personal safety trainer, for instance, has suggested an idea for a kolam. “Smear the plate with ghee and then, using a tea filter, sprinkle kumkum evenly over the ghee. Then, using a match stick, draw the kolam. You can have several of these around the kolu or use a different one each day,” she said.

A dire need for space

With doll vendors occupying the pavements of many streets in Mylapore, pedestrians are now forced to walk on the road, which results in inconvenience to motorists, too. There is no parking space, either.

The Chennai Corporation has plans to semi-pedestrianise the area. A. Kannan, an autorickshaw driver, said the Corporation should also ensure vendors do not take up road space. R. Mallikarjun, of Mangalore Modern Jewellery, said a separate haat-like structure, as in Delhi, would be an appropriate facility for such seasonal vendors.

Vendors said they had no other space to sell their wares. “If there was an open ground, it would be nice.”

H  21 Sep 2014