சென்னை:ரிப்பன் மாளிகைக்கு, வெள்ளை வர்ணம் பூசும் பணி நேற்று துவங்கியது.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை, நுாற்றாண்டு பழமையான கட்டடமாகும். பழமை மாறாமல், கட்டடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரிப்பன் மாளிகையின் முன்பகுதியில், வெள்ளை நிற வர்ணம் பூசும் பணிகள் நேற்று துவங்கின.
முன்னதாக, தொல்லியல் துறை, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட, இந்த கட்டட புனரமைப்பு பணிக்காக அமைக்கப்பட்ட ஆய்வு குழு பரிந்துரைத்த, வெள்ளை நிறம், ஒரு துாணுக்கு மட்டும் அடித்து சோதனை பார்க்கப்பட்டது.அந்த நிறம் சரியானதுதான் என்று பரிந்துரைக்கப்பட்டதை தொடர்ந்து, கட்டடம் முழுவதற்கும், அதே நிறம் பூசப்பட உள்ளன.அந்த பணிகள், ஓரிரு வாரங்களில் முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்னும் மாளிகையின் பின்புற சீரமைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை. உட்பகுதியிலும் தரைதளம், முதல்தளம், இரண்டாவது தளங்களில் பணிகள் அரைகுறையாய் உள்ளன என்பது,
குறிப்பிடத்தக்கது.
தினமலர் ஜூலை 27, 2014
No comments:
Post a Comment