Friday, October 10, 2014

சென்னை மால்கள்

சென்னை புகைப்படங்கள் - சென்னை மால்கள் - எக்ஸ்பிரஸ் அவென்யூ

எக்ஸ்பிரஸ் அவென்யூ எனப்படும் இந்த நவீன அங்காடி வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்ட ஒன்றாகும். எக்ஸ்பிரஸ் குழும நிறுவனம் இந்த வளாகத்தை உருவாக்கியுள்ளது.
முன்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட விசாலமான இடத்தில் இந்த நவீன அங்காடி வளாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கேமிங் ஆர்க்கேட் எனப்படும் பொழுதுபோக்கு மையம் இந்த வளாகத்தில் உள்ளது.
பல்வேறு சர்வதேச பிராண்டுகளின் விற்பனையகங்கள் இந்த எக்ஸ்பிரஸ் மால் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஹேம்லி’ஸ் பொம்மை விற்பனையகமும் இங்கு அமைந்துள்ளது.
ஃபன் சிட்டி எனப்படும் குழந்தைகள் விளையாட்டரங்கமும் இங்கு உள்ளது. பிட்சா ஹட் மற்றும் கே.எஃப்.சி போன்ற பிரபல உணவகங்களும் இங்கு உள்ளன. எட்டு திரைகளை கொண்ட சத்யம் சினிமா அரங்கம் (மல்ட்டிபிளக்ஸ்) ஒன்றும் இதில் இடம் பெற்றுள்ளது.
2. ஸ்பென்சர் பிளாசா
சென்னையிலேயே மிகப்பழமையான இந்த ஷாப்பிங் மால் நகரத்தின் முக்கிய சாலையான மௌண்ட் ரோடு என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட அண்ணா சாலையில் அமைந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்திலேயே கம்பீரமான கட்டிடக்கலை அம்சங்களுடன் 1864ம் ஆண்டில் சார்லஸ் டூராண்ட் மற்றும் ஜே.டபிள்யூ. ஸ்பென்சர் என்பவர்களால் இந்த இடத்தில் அந்நாளைய பழைய ஸ்பென்சர் பிளாசா அங்காடி உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இப்போதுள்ள ஸ்பென்சர் பிளாசா மால் வேறு உரிமையாளர்களால் 1985ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு பல வளாகங்கள்  அடுத்தடுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக ஸ்பென்சர் பிளாசா பல காலமாக இருந்து வருகிறது.
இந்த அங்காடி வளாகத்தில் எல்லா பிரபல சர்வதேச பிராண்டுகளின் விற்பனைக்கூடங்களும் இடம் பெற்றுள்ளன. வெஸ்ட்சைட், அடிடாஸ், நைகி, வான் ஹ்யூசன், புரோலைன், லூயி பிலிப், பாண்டலூன்ஸ் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
தவிர இரண்டு தளங்களில் லேண்ட்மார்க் அங்காடியும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. ஷாப்பிங் செய்துவிட்டு இங்குள்ள சரவணபவன் உணவகத்திற்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். பணமாற்றம் போன்ற சேவைகளை வழங்கும் வங்கிகளின் சேவைமாடங்களும் இந்த வளாகத்தில் உள்ளன.
3. அல்சா மால்
ஸ்பென்சர் பிளாசவுக்கு அடுத்தபடியாக பழமையான அங்காடி எனும் பெயரை இந்த அல்சா மால் பெற்றுள்ளது. சென்னை நகரத்தின் எக்மோர் பகுதியில் இது உள்ளது.
 இந்த மால் அமைந்திருக்கும் தெருவில் இதர ஷாப்பிங் அம்சங்களும் நிறைந்துள்ளன.
4. சிட்டி சென்டர்
சென்னையில் மைலாப்பூர் பகுதியில் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது கதீட்ரல் ரோடு சாலையில் இந்த சிட்டி செண்டர் எனும் ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இங்கு ஹெல்த் அன்ட் குளோ, லிலிபுட் (குழந்தைகளுக்களுக்கான ஆடைகள் மற்றும் பொம்மைகள் விற்பனையகம்), லேண்ட்மார்க் அங்காடி, ஆலன் சோலி, அடிடாஸ், மோச்சி (காலணியகம்) மற்றும் லைஃப்ஸ்டைல் போன்ற அங்காடிகள் அமைந்துள்ளது.

சிட்டி சென்டர் மால் வளாகத்தில் ஐநாக்ஸ் தியேட்டர் ஒரு பிரசித்தியான அம்சமாக இடம் பெற்றுள்ளது. எல்லா நாட்களிலும் இந்த திரையரங்கு நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது. மேலும், கே.எஃப்.சி, பிட்சா ஹட், காப்பர் சிம்னீ, சப்வே, கங்கோத்ரி போன்ற பிரபல உணவகங்களும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு மையத்தையும் இது கொண்டுள்ளது.
5. கோல்டு சௌக் கிராண்டி மால்
கோல்டு மால் எனப்படும் இந்த கோல்டு சௌக் கிராண்டி மால் சென்னை மாநகரத்திற்கு வெளியே வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அருகில் உள்ளது. இந்த ஷாப்பிங் வளாகத்தில் பல உயர்ரக சர்வதேச பிராண்டுகளின் கடைகள் உள்ளன. ஹரியானாவிலுள்ள ஏரின்ஸ் கோல்டு சௌக் குரூப் எனும் நிறுவனம் தனது கிளை வளாகமாக இதனை நிர்மாணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வளாகத்தில் நகை விற்பனைக்கூடங்கள், மேற்கத்திய ஆடைகளின் பிராண்டுகள், டிஸ்ஸோட், சிட்டிசென், கார்பன், உட்லேண்ட், லீவைஸ், லுசெரா, ஜான்பிளேயர்ஸ், நாவிகேட்டர், ரீபோக், லிலிபுட், ஒமேகா, டேக் ஹியர், லான்ஜீன், அடோரா மற்றும் மாண்ட் பிளாங்க் ஆகிய பிராண்டுகளின் விற்பனையகங்கள் உள்ளன.
இவை தவிர கியா, நிர்வாணா, சாங்கினி, ரீட் அன்ட் டெய்லர், சிக்னஸ், கேலக்ஸி, நக்ஷத்ரா, டைம்ஸ் வாட்சஸ், மண்யவார், சுல்தான் ஜுவெல்லரி, உம்மிடி பங்காரு, ஜிம்சன், மலபார் கோல்டு, எல்.கே.எஸ் கோல்டு, ரேவதி ஜுவெல்லர்ஸ், பாண்டலூன்ஸ் போன்ற இந்திய பிராண்டுகள் மற்றும் கடைகளும் இங்கு திறக்கப்பட்டுள்ளன.
6. காட்டன் ஸ்ட்ரீட்
குறைந்த விலையில் சில துணிவகைகளை வாங்குவதற்கு இந்த காட்டன் ஸ்ட்ரீட் மிகவும் ஏற்றது. எக்மோர் பகுதியில் பாந்தியன் சாலையை ஒட்டிய ஒரு தெருவில் வியாபாரிகள் காட்டன் துணி வகைகள் மற்றும் ஆடைகளை விற்பனை செய்கின்றனர்.
இங்கு பெண்களுக்கான சுடிதார் துணிவகைகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. அதுதவிர வீட்டு அலங்காரத்துக்கு தேவைப்படும் திரைச்சிலை, படுக்கை விரிப்புகள் போன்றவற்றுக்கான துணிகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுவாக மாலை நேரத்தில் இந்த கடைகள் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை வியாபாரம் நடைபெறுகிறது. வெளியூர் பயணிகள் பேரம் பேசி துணிகளை வாங்குவது அவசியம்.Native Planet 10 Oct 2014

No comments:

Post a Comment