Wednesday, September 10, 2014

பாரதி தெரியுமா?





 தமிழ்நாட்டின் தேசியக் கவிஞர் யாருன்னு தெரியுமா? 

பாரதியார். 

அவரோட உண்மையான பெயர் சுப்பிரமணியன். எல்லோரும் அவரை ‘சுப்பையா’ன்னு கூப்பிடுவாங்க. இவர் எட்டையபுரம் அப்படிங்கிற ஊர்ல 1882-ம் ஆண்டுல டிசம்பர் மாதம் 11-ம் தேதில பிறந்தார். இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம்தான் இல்லையா?

அவரைப் பத்தி உங்களுக்குத் தெரியாத விஷயங்களும் நிறைய இருக்கு. பாரதியாருக்குத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி உள்பட பல மொழிகள் தெரியும். பாரதியார் மதுரையில் ஆசிரியராக வேலை பார்த்திருக்காரு. சென்னையில் சுதேசமித்திரன், நமது இந்தியா போல பல பத்திரிகைகளிலும் வேலை பார்த்தாரு.

நம்ம நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது விடுதலைக்காக வ.உ. சிதம்பரம், சுப்பிரமணிய சிவா மாதிரியான தலைவர்கள்கூட சேர்ந்து போராடியிருக்காரு.

பாரதியார் குழந்தைகளுக்காக நிறைய பாட்டு எழுதியிருக்கார். ‘ஓடிவிளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...’ தெரியுமில்லையா? அது பாரதியாரோட பாட்டுதான். அவருக்கு தங்கம்மாள், சகுந்தலா அப்படினு ரெண்டு மகள்கள் இருந்தாங்க. அவருக்குத் குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அவுங்களுக்காகவும் நிறைய பாட்டு எழுதியிருக்கிறார்.

அதுபோல பாரதியாருக்கு ஆடு மாடு, நாய்க் குட்டி, பூனைக் குட்டினா ரொம்பப் பிடிக்கும். அதுங்களயும் தன்னோட பாட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கார். தனக்கு சோறு கிடைக்காத காலத்துலயும் அவர் குருவிங்களுக்குச் சாப்பாடு வைக்க மறந்ததேயில்லை.

பாரதியாருக்குச் சின்ன வயசுலயே கவிதை பாடுற ஆற்றல் இருந்துச்சு. மற்ற பசங்க எல்லாம் தெருவுல ஓடிப் பிடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தப்ப, இவர் கவிதை பாடிக்கிட்டு இருந்தாரு.

அவரோட திறமையால அவருக்கு எட்டையபுரம் மகாராஜா முன்னாடி பாட்டுப் பாடுற வாய்ப்பும் கிடைச்சது. அவரும் பிரமாதமா பாடியிருக்கிறார். அவரோட பாட்டை வியந்து பாராட்டுன மகாராஜா அவருக்கு, ‘பாரதி’ன்னு பட்டம் கொடுத்தாரு. அந்தப் பட்டமே அவரோட பெயராகவும் ஆகிப்போச்சு. சுப்பிரமணியன் என்ற பெயர் மறஞ்சுபோய், எல்லோரும் பாரதி அப்படினு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

அவரு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி கோயில் யானை தாக்கி இறந்தாரு. அவரு மறைந்து பலபல ஆண்டுகள் ஆகிடுச்சு. இருந்தாலும் அவரு நமக்காக எழுதி வைச்ச பாடல்கள் நம்மோடுதான் இன்னும் உயிரோட இருக்கு இல்லையா? ​

சுந்தரி தி இந்து: புதன், செப்டம்பர் 10, 2014

No comments:

Post a Comment